கிசான் நிதி முறைகேட்டை கண்டறிந்தது தமிழக அரசுதான் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!!

9 September 2020, 4:30 pm
CM Edappadi - updatenews360
Quick Share

கிசான் நிதி முறைகேட்டை கண்டறிந்தது தமிழக அரசுதான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு சென்றுள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் கூட்டத்தில் அவர் பேசியதாவது :- கடலூர், சேலம் உள்பட 13 மாவட்டங்களில் கிசான் நிதி முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேட்டை கண்டறிந்தது தமிழக அரசுதான். இந்த முறைகேட்டிற்கு காரணம் மத்திய அரசின் அறிவிப்புதான். 4 மாதத்தில் 41 லட்சமாக இருந்த விவசாயிகளின் எண்ணிக்கை 46 லட்சமாக உயர்ந்துள்ளது. கிசான் நிதி முறைகேட்டில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 81 ஒப்பந்த பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல, பசுமை வழிச்சாலை என்பது மத்திய அரசின் திட்டமாகும். இந்த திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்திக் கொடுப்பது மட்டுமே மாநில அரசு. இந்த சாலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளும். நதி நீர் பிரச்சனையில் தமிழகத்தில் உரிமையை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். செய்யாறு ஆற்றின் குறுக்கே புதிதாக அணைக்கட்டு அமைக்கும் திட்டத்துக்கு பரிசீலனை செய்யப்படும், எனத் தெரிவித்தார்.

Views: - 10

0

0