‘ஆதித்தமிழர் பேரவை வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வோம்’: கொமதேக பொதுச்செயலாளர் அறிவிப்பு…!!

Author: Aarthi Sivakumar
14 March 2021, 8:55 am
kmdk eswaran - updatenews360
Quick Share

கோவை: அவிநாசி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஆதித்தமிழர் பேரவையின் வேட்பாளருக்கு ஆதரவாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பிரச்சாரம் மேற்கொள்ளும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த கொங்குநாடு மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

திமுக தலைமையிலான கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும் எனவும், மக்கள் விரும்பும் ஆட்சியை அமைப்போம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வீர்களா? என்ற கேள்விக்கு கொங்கு மண்டலத்தில் விசிக தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை எனவும், அதனால் அவர்களுக்கு ஆதரவாக இங்கு பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என கூறினார்.

மேலும், அவிநாசி தனித்தொகுதியில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் போட்டியிடும் அதியமானுக்கு ஆதரவாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என தெரிவித்த அவர், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் பிரிக்கும் வாக்குகள் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என கூறியுள்ளார்.

Views: - 183

0

0