அடுத்தடுத்த திருப்பங்களை கொண்ட கோடநாடு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

Author: Babu Lakshmanan
7 September 2021, 9:37 am
Quick Share

சென்னை : கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு அடுத்தடுத்த திருப்பங்களுடன் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு உதகை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்படும் என்று எஸ்.பி ஆசிஷ் ராவத் தெரிவித்திருந்தார். இந்த தனிப்படை மீண்டும் விசாரணையை ஆரம்பிக்கவிருக்கிறது.

ஆனால், இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி முடித்து விட்டது. இருப்பினும், தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதால், விசாரணை மீண்டும் முதலிருந்து ஆரம்பிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்த வழக்கின் சாட்சியாக கருதப்படும் அனுபவ் ரவி, விசாரணைக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அவரது மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், மேல் விசாரணை செய்ய முழு அனுமதி உள்ளது என்று தெரிவித்திருந்தது.

அதனடிப்படையில், காவல்துறையினரின் மேல் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி, அனுபவ் ரவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அதில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றத்தால் மேல் விசாரணை நடத்துவது சட்டத்திற்கு புறம்பானது என்றும், உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்புக்கும் எதிரானது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோடநாடு வழக்கின் மேல் விசாரணைக்கு தடை கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Views: - 254

0

0