கே.பி.ராமலிங்கத்தின் வருகை பாஜகவுக்கு மேலும் உத்வேகம் கொடுக்கும் : எல்.முருகன் நம்பிக்கை!!

21 November 2020, 1:07 pm
bjp - kp ramalingam - updatenews360
Quick Share

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.பி. ராமலிங்கம் இன்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

கொரோனா காலகட்டத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழக அரசுக்கு வலியுறுத்தியிருந்தார். ஆனால், கொரோனா பேரிடரை மத்திய, மாநில அரசுகள் சிறப்பாக கையாண்டு வரும் நிலையில், அனைத்து கட்சி கூட்டம் அவசியமில்லை என்று திமுகவின் முன்னாள் எம்பி கே.பி. ராமலிங்கம் கருத்து தெரிவித்திருந்தார்.

இதன்மூலம், தலைமைக்கு எதிராக பேசியதாக கே.பி. ராமலிங்கம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். அவருக்கு கே.பி.ராமலிங்கத்துக்கு அடிப்படை உறுப்பினர் அட்டையை சி.டி.ரவி வழங்கினார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “கே.பி.ராமலிங்கத்தின் வருகையால் கூடுதல் பலம். அவரது வருகை பாஜகவுக்கு மேலும் உத்வேகம் அளிக்கிறது,” என்று அவர் தெரிவித்தார்.

Views: - 0

0

0

1 thought on “கே.பி.ராமலிங்கத்தின் வருகை பாஜகவுக்கு மேலும் உத்வேகம் கொடுக்கும் : எல்.முருகன் நம்பிக்கை!!

Comments are closed.