ரேசன் கடையா..? திமுக அலுவலகமா…? பிரமாண்ட கட்சி கொடி… முகம் சுழித்த பொதுமக்கள்…!! விளாசும் நெட்டிசன்கள்..!!

15 May 2021, 4:37 pm
dmk ration shop - updatenews360
Quick Share

கொரோனா தொற்று நிவாரணமாக அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.4,000-த்தில் முதற்கட்டமாக ரூ.2,000 வழங்கும் பணி தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது. ரேசன் கடைகளில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை சமூக இடைவெளியுடன் டோக்கன் அடிப்படையில் மட்டுமே ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது.

திமுக அரசு விநியோகித்து வரும் நிவாரணத்திற்கான டோக்கன்களில் முதலமைச்சரின் புகைப்படமோ, பெயரோ பொறிக்கப்படவில்லை என அக்கட்சியினர் கொண்டாடி வந்தனர். மேலும், இதுதான் மக்களுக்கான அரசு எனவும் புகழ்ந்து பேசி வந்தனர். ஆனால், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசின் நிவாரணப் பொருட்களில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோரின் பெயரும், புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன.

இது தொடர்பான புகைப்படங்களை அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு, திமுகவினருக்கு தக்க பதிலடி கொடுத்து வந்தனர். அதோடு, ரேஷன் கடைகளின் வெளிப் பகுதிகளில் திமுக கொடியை கட்டி கொரோனா நிவாரணத் தொகை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், உச்சகட்ட நிகழ்வாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரேஷன் கடையா..? இல்லை திமுக அலுவலகமா..? என்ற சந்தேகத்தை கிளப்பும் விதமாக, பிரமாண்ட திமுக கொடியை ரேஷன் கடைக்குள் வைத்து, கொரோனா நிவாரணத் தொகை விநியோகிக்கப்பட்டு வந்த சம்பவம் பயனாளிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தமிழக அரசுதான் பணத்தை வழங்குகிறது. எனவே திமுக கொடியை ரேசன் கடைகளில் எப்படி கட்டலாம் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும், இதுபோன்ற செயல்களை தடுக்க மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 331

0

0