மேலும் ஒரு தி.மு.க., எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதி : மருத்துவமனையில் அனுமதி

10 August 2020, 11:30 am
Trichy Corona test
Quick Share

திருச்சி : தி.மு.க.வைச் சேர்ந்த மேலும் ஒரு எம்.எல்.ஏ. கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் மெல்ல மெல்ல கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வருகிறது. அதேவேளையில், நோய் தொற்றில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த நோய் தொற்றுக்கு அகப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், திருச்சி மாவட்டம் குளித்தலை தொகுதியைச் சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ராமர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, பழனி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ. செந்தில்குமார், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி உள்ளிட்ட தமிழக எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 3

0

0