குமரி இடைத்தேர்தல்… வேட்பாளரை அறிவித்தது பாஜக : மீண்டும் சாதிப்பாரா பொன். ராதாகிருஷ்ணன்..!!!

6 March 2021, 12:01 pm
POn radha Krishnan- updatenews360 (18)
Quick Share

சென்னை : கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பாஜக வேட்பாளராக முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வசந்த குமார் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, பிறகு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஏப்.,6ம் தேதி நடக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலுடன், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனிடையே, அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக, நேற்று தொகுதி உடன்பாட்டை இறுதி செய்தது. அதாவது, 2/ சட்டப்பேரவை தொகுதிகளும், குமரி இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பையும் பாஜக பெற்றது.

இந்த நிலையில், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பாஜக வேட்பாளராக முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2019ம் ஆண்டு வசந்தகுமாருக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியை தழுவியிருந்தாலும், 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, குமரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் காங்கிரஸ் தரப்பில் விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. மறைந்த எம்பி வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் விருப்ப மனு கொடுத்துள்ளார். அதேபோல, பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தரப்பில் விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது, பாஜக வேட்பாளர் அறிவிக்கப்பட்டு விட்டதால், அதற்கு இணையாக இருக்கும் நபரை தேர்வு செய்ய காங்கிரஸ் விரும்பும். அதேவேளையில், வசந்த குமாரின் மகன் விஜய் வசந்தை நிறுத்தை, அனுதாப ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்று விடலாம் என்பது அக்கட்சியின் மூத்த தலைவர்களின் மனக்கணக்காக இருக்கிறது.

Views: - 13

0

0