குமரியில் தொடர் கனமழை… மூழ்கும் குடியிருப்புகள்… மிதக்கும் தண்டவாளம்… போக்குவரத்து துண்டிப்பு!!

Author: Babu Lakshmanan
13 November 2021, 12:02 pm
Kumari rain - updatenews360
Quick Share

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது .இதனால் பொதுமக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர் .

குமரி மாவட்டம் இரணியல் அருகே தெங்கன்குழி பகுதியில் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் குருவாயூர் ரயில் நாகர்கோவிலில் இருந்தும் பரசுராம், எரநாடு, புனலூர் மதுரை உள்ளிட்ட ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டன.

அதேபோல் சுசீந்திரத்தில் ரயில் தண்டவாளத்தில் மழை வெள்ளம் தேங்கியதால். இன்று அதிகாலை சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் இருந்து ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் நாகர்கோவில் செல்ல முடியாமல் தவித்தனர். பின்னர் ரயில்வே நிர்வாகம் மூலம் கன்னியாகுமரி போக்குவரத்து பணிமனையில் இருந்து மூன்று பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நேற்று மாலை தொடங்கிய கனமழை தொடர்ந்து விடிய விடிய பெய்து வருகிறது. இதனால் ஒருசில குளங்களில் உடையும் அபாய நிலையில் உள்ளது. அதேபோல் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்தால் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் சிக்கி தவித்துக் வருகின்றனர். மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில் ஒருசில குடியிருப்பு பகுதிகளில் 10 அடிக்கு மேல் மழை வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் அவர்கள் பாதுகாப்பு கருதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால் ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது அலுவலகங்கள் செல்பவர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இவ்வாறு குமரி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்துள்ள நிலையில் இன்று காலையும் கனமழை பெயது வருவதால், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

Views: - 440

0

0