ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு… கும்பகோணத்தில் அதிர்ச்சி சம்பவம்… சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை (வீடியோ)…!

Author: Babu Lakshmanan
8 April 2022, 9:36 am
Quick Share

தஞ்சை : கும்பகோணத்தில் ஓடும் பேருந்தில் ஏறிய நபர் ஒருவர், ஓட்டுநர் மற்றும் நடத்துநரை அரிவாளால் தாக்கிய அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கும்பகோணத்தில் இருந்து எலுமிச்சங்காய் பாளையத்திற்கு மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தில் பயணித்த நபர் ஒருவர் பேருந்தை வழியில் நிறுத்தக்கோரி வாக்குவாதம் செய்துள்ளார். மேலும், ஸ்டியரிங்கை திருப்பி வம்பில் ஈடுபட்டதுடன், சாவியையும் பிடுங்கி உள்ளார்.

இதைத் தொடர்ந்து, தனது நண்பர்களை வரவழைத்த அந்த நபர், ஓட்டுநர் மற்றும் நடத்துநரை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடினர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த வீடியோவை பகிரும் நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 600

0

0