அதிமுக ஆட்சியில் அணில்களே இல்லையா…? அமைச்சர் செந்தில் பாலாஜியை கிண்டலாக விமர்சித்த எல்.முருகன்…!!

By: Babu
23 June 2021, 5:06 pm
l murugan - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் மின்தடை ஏற்படுவதற்கான காரணங்களை கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜியை பாஜக மாநில தலைவர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து, மின்வெட்டு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. ஊரடங்கு சமயத்தில் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய சூழலில் ஏற்படும் மின்தடையினால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது.

இதனிடையே, ஊரடங்கு முடியும் வரையில் மின்வெட்டு ஏற்படாது என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். ஆனால், தமிழகத்தில் மின்வெட்டு தவிர்க்க முடியாததாகி விட்டது. பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தமிழகத்தில் மின்தடை ஏற்படுவதற்கான காரணம் குறித்து அமைச்சர் செந்தில் பாலராஜி கூறியது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. அதாவது, மின்கம்பிகளில் அணில்கள் செல்வதால், உரசல் ஏற்பட்டு மின்தடை ஏற்படுவதாக தெரிவித்தார். அமைச்சரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பாஜக ஜன சங்க நிறுவனர் சியாம முகர்ஜியின் 68வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அப்போது, அவரது திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்திய பாஜக மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அவர், ” அதிமுக ஆட்சியில் பத்து ஆண்டுகளில் மின்வெட்டே ஏற்படாத நிலையில், அந்த காலகட்டங்களில் அணில்கள் எல்லாம் இல்லையா..?” எனக் கேள்வி எழுப்பினார்.

Views: - 171

0

0