நில உரிமையாளரை துப்பாக்கியால் சுட்ட திமுக எம்எல்ஏ கைது..!

12 July 2020, 4:19 pm
dmk mla gun shoot 1- updatenews360
Quick Share

செங்கல்பட்டு : நில அபகரிப்பு மோதலின் போது நில உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்ற திமுக எம்எல்ஏ கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவின் திருப்போரூர் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் இதயவர்மன். இவருக்கும், சீனிவாசன் என்பவரும் ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இருவருக்கும் இடையே நிலப்பிரச்சனை ஏற்பட்டதாகவும், இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மோதல் உருவானதாக தெரிகிறது.

அப்போது, நில உரிமையாளராக சீனிவாசனை திமுக எம்எல்ஏ இதயவர்மன் தன்னிடம் இருந்த கள்ளத் துப்பாக்கியின் மூலம் சுட்டுள்ளார். இதில், அவர் பலத்த காயமடைந்துள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த இந்த மோதலில், சீனுவாசன் உயிர் தப்பியுள்ளதாகவும், காரில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, இடுப்பில் குண்டுகள் துளைத்த சீனிவாசன், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக திருப்போரூர் காவல் நிலைய கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அடங்கிய போலீஸ் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, திமுக எம்எல்ஏ இதயவர்மன் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், தலைமறைவான திமுக எம்எல்ஏ இதயவர்மனை இரு மாவட்ட காவல்துறையினரும் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், திமுக எம்.எல்.ஏ. இதயவர்மன் சென்னை அருகே மேடவாக்கம் பகுதியில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.