அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் வழங்கும் ஆண்டாக மலரட்டும்: தலைவர்கள் யுகாதி திருநாள் வாழ்த்து..!!

13 April 2021, 9:07 am
ugadi wish - updatenews360
Quick Share

சென்னை: யுகாதி திருநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டு யுகாதி தினமாக கொண்டாடப்படுகிறது. பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி கொண்டாட வேண்டும். அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால்கூட மறுநாள்தான் உகாதி கொண்டாட வேண்டும் என்பது விதி. மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த உகாதி பண்டிகை உணர்த்துகிறது.

யுகாதி புத்தாண்டு தினத்தன்று மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து புத்தாடை அணிந்து யுகாதி பச்சடி செய்வதில் இருந்து நாள் ஆரம்பிக்கிறது.

இன்று செவ்வாய்கிழமை யுகாதிப் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் யுகாதி, குடி படாவா, சைத்ர சுக்லாதி, சேதி சந்த், வைசாகி, விசு, புத்தாண்டு, வைஷ்காதி மற்றும் போஹாக் பிஹூ’ ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் , குடி படுவா, யுகாதி விழா,சஜிபு நோங்மபன்பா பண்டிகை தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கு, கன்னடா,மராத்தி, சிந்தி மாநில மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார். கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் பாதுகாப்புடன் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி பண்டிகையை பாதுகாப்புடன் கொண்டாடுகள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் யுகாதி பண்டிகை வாழ்த்து கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு எனது இதயம் கனிந்த யுகாதி தின நல்வாழ்த்துக்கள். இப்புத்தாண்டு உங்கள் அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

Views: - 35

0

0