தமிழகத்தில் 2,500க்கும் கீழ் குறைந்த கொரோனா: இன்றைய கொரோனா நிலவரம்

14 July 2021, 9:47 pm
Corona Cbe - Updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் மேலும் 2,458 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 54ஆவது நாளாக ஒருநாள் கொரோனா மொத்த பாதிப்பு குறைந்து வருகிறது. 1,46,394 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒருநாள் பாதிப்பு 2,458 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றால் மேலும் 55 பேர் உயிரிழந்தனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,557 ஆக உயர்ந்துள்ளது. இணை நோய்கள் இல்லாத 20 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 39 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 16 பேரும் உயிரிழந்தனர்.இன்றைய எண்ணிக்கையுடன் இதுவரை கொரோனா தொற்றால் மொத்தமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,557 -ஐ எட்டியுள்ளது.

Views: - 60

0

0