தமிழகத்தை ஒரு பொம்மை முதல்வர் ஆளுகிறார்.. நீங்க சைக்கிள் ஓட்டவா மக்கள் ஓட்டுப்போட்டாங்க : Cm ஸ்டாலினை கடுமையாக தாக்கிய இபிஎஸ்!!

Author: Babu Lakshmanan
7 February 2022, 1:30 pm
Quick Share

விருதுநகர் : நீங்கள் சைக்கிள் ஓட்டுவதற்கும், டீக்குடிப்பதற்குமா..? மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலினை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக, பாஜக, பாமக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக, தேமுதிக என பலமுனை போட்டி நிலவுகிறது. இருப்பினும், திமுக – அதிமுக இடையேயான நேரடி யுத்தமாக இந்தத் தேர்தல் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் 15ம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதையொட்டி, விருதுநகரில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த போது, அவர் பேசியதாவது :- கடந்த 8 மாதங்களாக திமுக அரசு எந்த நல திட்டத்தையும் செய்யவில்லை. திமுக அரசு ஒரு சர்வாதிகார அரசு. அதில் நியாயம் எதிர்பார்க்க முடியாது. தமிழகத்தை ஒரு பொம்மை முதலமைச்சர் ஆள்கிறார். ஒரு மூன்று, நான்கு இடங்களில் ஆய்வு செய்வது போல் பாவனை செய்கிறார்.

சைக்கிள் ஓட்டுகிறார், டீ குடிக்கிறார், பளு தூக்குகிறார். 8 மாதத்தில் வேறு எந்த புதிய நல திட்டமும் நடைபெறவில்லை. மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, மக்களுக்கு எதுவும் செய்யவில்லை, என கடுமையாக விமர்சித்துள்ளார்.

Views: - 615

0

0