தமிழக மீனவர்களிடம் கைப்பற்றிய 105 படகுகள்: ஏலம் விடும் பணியை தொடங்கிய இலங்கை அரசு…கொந்தளிக்கும் மீனவர்கள்..!!

Author: Rajesh
7 February 2022, 4:38 pm
Quick Share

இலங்கை: தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட விசைப்படகுகளை இலங்கை அரசு ஏலம் விடத்துவங்கியுள்ளது.

தமிழக மீனவர்களிடம் இருந்து, எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை ஏலம் விடும் பணியை இலங்கை அரசு தொடங்கி உள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை அரசால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்பட்டும் அவா்களின் 105 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டும் உள்ளன.

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ள 105 படகுகள் நீதிமன்ற உத்தரவின்படி ஏலம் விடப்படும் என இலங்கை அரசு அறிவித்தது. இதற்கு தமிழக மீனவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த எதிர்பையும் மீறி தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை ஏலம் விடும் பணியை இலங்கை அரசு இன்று தொடங்கியது.

அரசுடைமையாக்கப்பட்ட 105 படகுகளில் 65 படகுகளை காரைநகரில் ஏலம் விடும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, படகுகளை ஏலம் விடும் பணிகளைத் தடுக்க வேண்டும்; படகுகளை மீட்டு தர வேண்டும் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 1434

0

0