உள்ளாட்சித் தேர்தல் அதிர்ச்சி : காங்., விசிக, மதிமுகவுக்கு அல்வா!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2021, 9:08 pm
Dmk Alliance- Updatenews360
Quick Share

2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டிலும் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக முஸ்லிம்லீக் உள்ளிட்ட ஒரு டஜன் கட்சிகள் தற்போதும் அதே அணியில் நீடிக்கின்றன.

ஊரக உள்ளாட்சி தேர்தல்

2019 டிசம்பர் மாதம் நடந்த 27 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்களிலும் இவை ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்தித்தன.

State election commission convenes all-party meet to discuss TN local polls  - DTNext.in

எஞ்சிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 தேதிகளில் இரு கட்டாங்களாக தேர்தல் நடக்கிறது.

திமுக கூட்டணியின் முதல் உள்ளாட்சி தேர்தல்

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு திமுக கூட்டணி சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பதால் அரசியல் களம் பரபரக்கிறது. ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய தலைவர், மாவட்ட கவுன்சிலர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், என 9 மாவட்டங்களில் பல ஆயிரம் பதவிகள் என்பதால், ஒட்டுமொத்தமாக அவற்றை கைப்பற்றிவிடவேண்டும் என்ற முனைப்புடன் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தேர்தல் பணியாற்றி வருகின்றன.

DMK-Congress make it official: Seal alliance in TN for 2019 Lok Sabha polls  | The News Minute

அதிமுக கூட்டணி

அதிமுகவை பொறுத்தவரை கூட்டணியில் பாஜக, தமாகா மற்றும் சிறு சிறு கட்சிகள் அப்படியே நீடிக்கின்றன. பாமக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தாலும் கூட வட மாவட்டங்களில் நிலவும் கடும் போட்டியை கருத்தில்கொண்டு தற்போது அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் இடங்களை பகிர்ந்து கொள்ளும் மறைமுக முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

BJP-AIADMK alliance in Tamil Nadu to be announced today: Sources -  Elections News

செயல்படாத திமுக வாக்குறுதிகள்

தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளில், நீட் தேர்வு ரத்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத்தொகை, கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்பு, மின் கட்டணம் மாதாந்திர முறையில் வசூல் போன்ற நேரடியாக பயனளிக்கும் திட்டங்களை இதுவரை செயல்படுத்தாததால் அது இந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இது தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று அதிமுக கூட்டணி நம்புகிறது.

DMK releases manifesto, promises 75% jobs for locals in Tamil Nadu, free  tablets

அதேநேரம் உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் உள்ளன.

திமுக இடப்பங்கீடு

திமுகவைப் பொறுத்தவரை அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களே கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களை பங்கீடு செய்துகொள்ளலாம் என்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஒருபக்கம் வேட்புமனு தாக்கல் நடந்து கொண்டிருந்தாலும் கூட இன்னொரு பக்கம்
இடப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்கிறது.

INTERVIEW | Stalin proposed Rahul for PM candidate, he won't go against it: KS  Alagiri- The New Indian Express

இந்த உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்கு திமுக தலைமை 15 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் வைத்திருந்தது. ஆனால் வடமாவட்டங்களில் 10 சதவீத இடங்களை கூட திமுக மாவட்ட செயலாளர்கள் பகிர்ந்து கொள்ள முன்வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 5 முதல் 7 சதவீத இடங்களை மட்டுமே ஒதுக்க முடியும் என்று திமுக மாவட்ட செயலாளர்கள் மிகக் கறாராக கூறிவிட்டனர், என்கிறார்கள்.

கே.எஸ் அழகிரி கொதிப்பு

அதுவும் நான்கைந்து மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கு திமுக தரப்பில் இருந்து செமத்தியான கவனிப்பும் நடந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் காங்கிரசுக்கு 2 சதவீத இடங்கள் கூட கிடைக்கவில்லை என்கிறார்கள். இந்த தகவல் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் காதுகளுக்கு செல்ல அவர் கொதித்துப் போயுள்ளார்.

DMK and Cong are joined hands, we should not separate': KS Alagiri on  rumours of rift | The News Minute

15 சதவீத இடங்கள் கேட்டால்தான் 10 சதவீதமாவது கிடைக்கும் என்பது அவருடைய கணக்காக இருந்தது. அதற்கும் தனது கட்சிக்காரர்களே வேட்டு வைத்து விட்டதால் அவர் மனம் நொந்துபோய் இருக்கிறார்.

அதுவும் காங்கிரசுக்கு செல்வாக்கு உள்ளதாக கூறப்படும், திருநெல்வேலி தென்காசி மாவட்டங்களில் கூட இதுபோல நடந்து இருப்பதை அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

பரிதாப நிலையில் விசிக

திமுக கூட்டணியில் இன்னொரு பெரிய கட்சியான விசிகவின் நிலையோ இன்னும் பரிதாபம். அக்கட்சியின் தலைவர் திருமாவளவனிடம், திமுக மேலிடத் தலைவர்கள் 5 சதவீத இடங்களை ஒதுக்கி தருகிறோம் என்று உறுதியளித்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஒரு சில மாவட்ட திமுக செயலாளர்கள் 2 சதவீத அளவிற்கு மட்டுமே இடங்களை விசிகவுக்கு ஒதுக்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதுவும் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் பற்றி மூச்சே விடவில்லை.

Tamil Nadu polls: DMK offers five seats to VCK, ally demands 10 | The News  Minute

செல்வாக்கு இல்லாத கம்யூ.,

இதேபோல் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திருநெல்வேலியிலும் தென்காசியில் சில இடங்களை மட்டுமே திமுக பகிர்ந்து கொண்டிருக்கிறது. இந்த இரு கட்சிகளும் தலா
5 சதவீத இடங்களை எதிர்பார்த்தன. ஆனால் மொத்தமாக 2 சதவீத இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

CPI gets 6 seats in the DMK alliance - The Hindu

அதுவும் வட மாவட்டங்களில், உங்கள் கட்சிகளுக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செல்வாக்கு இல்லை என்ற காரணம் வேறு கூறியதாக சொல்கிறார்கள். இதனால் இரு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் இது என்ன சோதனை? என்று மனதுக்குள் வேதனையோடு புலம்புகின்றனர் என்கிறார்கள்.

மோசமான நிலையில் மதிமுக

மதிமுகவின் நிலைமையோ படுமோசம். அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் பெயரளவுக்கு கூட பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்படவில்லை.

After Duraimurugan snub, Vaiko calls on Stalin - The Hindu

“உங்க கட்சிதான் எங்களோட இணைஞ்சு ரெண்டு வருஷம் ஆச்சே. எதுக்கு உங்களுக்கு சீட்டு” என்று திமுகவினர் கிண்டல் வேறு செய்கிறார்களாம். திருநெல்வேலி, தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் சில இடங்களை திமுக பகிர்ந்து கொண்டிருப்பதாக தாயகத்தில் பரபரப்பு பேச்சு அடிபடுகிறது. அப்படியென்றால் மற்ற 6 மாவட்டங்களிலும் ஓரிரு இடம் கூட மதிமுகவுக்கு ஒதுக்கப்படமாட்டாது என்பது உறுதியாகத் தெரிகிறது.

தோழமை கூட்டணி கட்சிகளின் நிலை?

இந்தக் கட்சிகளின் பெயர்களாவது, திமுக கூட்டணி பேச்சு வார்த்தையில் அடிபடுகிறது. ஆனால்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி பற்றி எந்தத் தகவலும் இல்லை. இந்தக் கட்சிகளுக்கு அரை சதவீத இடம் கூட ஒதுக்கப்படவில்லை என்கிறார்கள்.

இப்படி திமுக கூட்டணியில் உள்ள அதன் பிரதான கட்சிகளுக்கு மிக மிகக் குறைவான இடங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு இருப்பதால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர் மாவட்டங்களில் கூட்டணி பேச்சுவார்த்தையில் கடும் இழுபறி நிலை காணப்படுகிறது. வேட்புமனு வாபஸ் வாங்கும் நாளுக்குள் இதற்கு தீர்வு காணப்படும் என்று காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டு கட்சிகள் நம்புகின்றன.

Tamil Nadu elections: DMK seals poll pacts with IUML and MMK | Cities  News,The Indian Express

தங்களுக்கு திமுக மேலிடம் ஒதுக்குவதாக கூறிய 15, 5 சதவீத இடங்களை திமுக மாவட்ட செயலாளர்கள் தர மறுப்பது கூட்டணிக்குள் சலசலப்பையும் முணுமுணுப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அரசியல் விமர்சகர்களின் கருத்து

அதேநேரம் அரசியல் விமர்சகர்களின் பார்வை இதில் வேறு விதமாக உள்ளது. இதுபற்றி அவர்கள் கூறும்போது, “திமுக தலைமையும் அதன் மாவட்ட செயலாளர்களும் தற்போது தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு இருப்பதற்கு சில காரணங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன. முதலில் பாமக தனித்துப் போட்டியிடும் என்று வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பாமகவின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டணி இல்லாமல் ஜெயிப்பது கடினம் என்ற உண்மையான கள நிலவரத்தை உணர்ந்துள்ளனர். இதனால் தற்போது அவர்கள் அதிமுக-பாஜகவுடன் மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தி இடங்களைப் பகிர்ந்து கொள்ளும் மறைமுக நடவடிக்கையும் ஒருபக்கம் நடக்கிறது. இதை உணர்ந்துதான் திமுக, தனது கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்கத் தயங்குகிறது.

மேலும் திமுக மாவட்டச் செயலாளர்கள், கூட்டணி கட்சிகளின் மாவட்டச் செயலாளர்களிடம் சாதுர்யமாக பேசி, நன்கு உபசரித்து அவர்களை சரிக்கட்டி 90 முதல் 95 சதவீத இடங்களில் திமுக போட்டியிடுவதற்கு வழி செய்துவிட்டனர், என்கிறார்கள்.

போட்டியில் விஜய் ரசிகர்கள்?

நடிகர் விஜய்யின் ரசிகர் மன்ற நிர்வாகிகளும் தற்போது போட்டிக் களத்தில் குதித்து விட்டனர். அவர்கள் எல்லாக் கட்சி வேட்பாளர்களுக்கும் கடும் சவால் அளிக்கலாம் என்றும் திமுக மேலிடம் கருதுகிறது.

Vijay distances himself from political party registered by his father | The  News Minute

பல இடங்களில் சுயேச்சைகளும், அரசியல் கட்சியினருக்கு இணையாக தங்களது பணம் பலத்தையும், சொந்த செல்வாக்கையும் வெளிப்படுத்தும் விதமாக உள்ளாட்சித் தேர்தலில் களம் இறங்குவார்கள். இது எல்லாக் கட்சிகளுக்குமே பெரும் சவாலாக இருக்கும்.

இப்படி போட்டி கடுமையாக இருப்பதால் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிடும் இடங்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை உறுதியாக கூற முடியாது. எனவேதான்
திமுக குறைந்தபட்சம் 90 சதவீத இடங்களில் போட்டியிட விரும்புகிறது.

அப்போதுதான் அடுத்து நடக்கவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களிலும் பெரும் வெற்றியைக் குவிக்க முடியும் என்று திமுக தலைமை கருதுகிறது.

எதிர்க்கட்சிகள் மகிழ்ச்சி

இந்த நிலையில் நடிகர் கமல், டிடிவி தினகரன் போன்றோர் தங்களுக்கு மீண்டும் டார்ச்லைட், குக்கர் சின்னம் கிடைத்ததற்காக பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தனித்துப் போட்டியிடும் தேமுதிகவும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறது. இந்தக் கட்சிகள் நிறுத்தும் வேட்பாளர்களில் எத்தனை பேர் கடைசி வரை தேர்தல் களத்தில் இருப்பார்கள் என்பது கேள்விக்குறியான ஒன்று.

கழகங்களை பஞ்சராக்கும் தினகரன், சீமான், கமல் கட்சிகள்!' - தேர்தல் நம்பர்  கேம் |TTV Dinakaran, Seeman, Kamal parties role in 2021 assembly election -  analysis

ஏனென்றால் உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களை விலைக்கு வாங்குவது சர்வ சாதாரணமாக நடக்கக் கூடிய நிகழ்வாகும். தேர்தல் முடிவுகள் வெளியாகும்போதுதான் யார் யார் களத்தில் இருந்தார்கள் யார், யார்? ஒதுங்கிக் கொண்டார்கள் என்பதெல்லாம் வெளிச்சத்துக்கு வரும். அதனால் சிறு, சிறு கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இந்த உள்ளாட்சி தேர்தல் ஒரு ஜாக்பாட்தான்” என்று அவர்கள் எதார்த்த நிலையை குறிப்பிட்டனர்.

Views: - 447

0

0