உள்நாட்டு விமான பயணிகளுக்கான புதிய விதிமுறைகள் வெளியீடு

1 August 2020, 3:20 pm
Flight air india 01 updatenews360
Quick Share

டெல்லி : உள்நாட்டு விமான பயணங்களுக்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, மாநிலங்களில் நிலவும் கொரோனா பாதிப்புகளுக்கு ஏற்றவாறு நீட்டிக்கப்பட்டும், தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. ஆனால், நாடு முழுவதிலும் பொது போக்குவரத்திற்கான தடையை மத்திய அரசு இன்னும் விளக்கிக் கொள்ளவில்லை. அந்த வகையில், ஆக.,31ம் தேதி வரையில் சர்வதேச விமான சேவைகளுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உள்நாட்டு விமான பயணிகளுக்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்திற்கு வரும் அனைத்து விமானப் பயணிகளுக்கும் தெர்மல் ஸ்கேனிங் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேபோல, பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் விமானப் பயணிகள், தங்களை தாங்களே வீட்டில் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தமிழகத்திற்கு வருபவர்கள் அனைவரும் இ-பாஸ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply