ஈரோடு மாவட்ட எல்லைகள் மூடல்… ‘தனிமைப்படுத்தும்’ நடவடிக்கைகள் அதிரடியாக தொடக்கம்!

23 March 2020, 10:37 am
Erode updatenews360
Quick Share

மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்று ஈரோடு மாவட்டம் தனிமைப்படுத்தப்படுகிறது; அதன்படி,  மாவட்டத்தின் எல்லைகள் மூடப்பட்டு வருகின்றன.

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 80 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்களும் அடங்கும்.

இம்மூன்று மாவட்டங்களை முடக்க மத்திய அரசு அறிவுறுத்தினாலும், மாநில அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லாமல் இருந்தது. இந்த சூழலில் தான் இன்று காலை சென்னையில் முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதேபோல், சம்மந்தப்பட்ட 3 மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

இச்சூழலில் ஈரோடு மாவட்டத்தை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. சுற்றியுள்ள திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் ஈரோட்டுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் – ஈரோடு எல்லைப்பகுதியான குமாரபாளையத்தில் இரு மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்களுக்கு  மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது.