அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வழிபட அனுமதி இல்லை: தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்..!

Author: kavin kumar
10 January 2022, 10:08 pm
Quick Share

சென்னை: தமிழகத்தில் ஜன 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளொன்றிற்கு 10 ஆயிரத்தை கடந்துள்ளது. உருமாறிய ஓமிக்ரான் வகை கொரோனா தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, ஏனைய நாட்களில் இரவு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இருந்த போதிலும் கொரோனா தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாவட்டம் வாரியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் உருமாறிய ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஜனவரி 31 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

  • பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்வோர் பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75 சதவீதம் பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி

*ஜனவரி 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு

  • ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது பொது,போக்குவரத்து, மெட்ரொ ரெயில் இயங்காது. மின்சார ரெயில்கள் ஞாயிற்று கிழமை அட்டவணைப்படி இயங்கும்.
  • உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி

*உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி

  • இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.

*16-ம் தேதி, வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை வாடகை வாகனங்களுக்கு அனுமதி

*பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்வோர் நலன் கருதி பொது பேருந்துகளில் 75% பயணிகள் அனுமதி.

  • முழு ஊரடங்கு நாளில் தடை செய்த/ அனுமதித்த இதர செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும்.
  • பொது முடக்க காலத்தில் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜனவரி 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 227

0

0