7.5. சதவீத உள்இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் பாராட்டு தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை…!!

2 November 2020, 5:02 pm
madurai court- updatenews360
Quick Share

அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர 7.5. சதவீத உள்இடஒதுக்கீடு தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.

7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சிறப்பு மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 16ம் தேதி நிறைவேற்றம் செய்யப்பட்டது. பின்னர், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் அனுமதியளிக்க காலதாமதமானதால், 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அரசாணையை தமிழக அரசு கடந்த 29ம் தேதி பிறப்பித்தது. இதனை தொடர்ந்து, 7.5. சதவீத உள்இடஒதுக்கீடு சட்ட முன்வடிவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார்.

இதற்கிடையே, 7.5. சதவீத உள்இடஒதுக்கீடு இந்த ஆண்டே அமல்படுத்த கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, 7.5. சதவீத உள்இடஒதுக்கீடு அரசாணையை தமிழக அரசு கடந்த 29ம் தேதி பிறப்பித்தது. தொடர்ந்து, 30ம் தேதி உள்ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார் என்று அரசு தலைமை வழக்கறிஞர் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் தெரிவித்தார்.

இதனையடுத்து, 7.5. சதவீத உள்இடஒதுக்கீடு தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கும் நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். 2017ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை மருத்துவப்படிப்பிற்கு அரசு பள்ளி மாணவர்கள் வெறும் 14 பேர் மட்டுமே சேர்ந்துள்ள நிலையில், உள்ஒதுக்கீடு இந்த ஆண்டு 300 முதல் 400 வரை அரசு மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர முடியும் என்பது மகிழ்ச்சியளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Views: - 14

0

0