ஆபாச விளம்பரங்களுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு…!!

12 November 2020, 3:39 pm
madurai court- updatenews360
Quick Share

மதுரை: ஆபாசத்தை தூண்டும் வகையில் விளம்பரங்களை ஒளிபரப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்கள் ஆபாசமாகவும், வளர் இளம் பருவத்தினரை தூண்டும் விதமாகவும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

திரைப்படங்களை போல விளம்பரங்களையும் தணிக்கைக்கு உட்படுத்த சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு, நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இதனை, விசாரித்த நீதிபதிகள், ஆபாசமாக உள்ள கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சனைகளுக்கான மருந்துகள், உள்ளாடைகள், வாசனை திரவியங்கள், சோப்புகள், ஐஸ்கிரீம் உள்ளிடவைகளுக்கான விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டுள்ளனர். மேலும், வழக்கு குறித்து, மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

Views: - 21

0

0