பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு : 18 காளைகளை அடக்கிய வீரத்தமிழன் கார்த்திக்கிற்கு கார் பரிசு..!!

15 January 2021, 5:51 pm
Quick Share

மதுரை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நடத்தப்பட்ட பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், உலக பிரசித்தி பெற்ற பாலமேட்டில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

இதில், 783 காளைகளும், 652 காளையர்களும் களமிறக்கப்பட்டனர். அதிக காளைகள் இருந்ததால், ஒரு மணி நேரம் கூடுதலாக நடத்தப்பட்டது. இதில், 18 காளைகளை அடக்கிய கார்த்திக் என்னும் இளைஞருக்கு சிறந்த மாடுபிடி வீரருக்கான கார் பரிசு வழங்கப்பட்டது. 17 காளைகளை அடக்கிய பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் 2வது இடத்தையும், 10 காளைகளை அடக்கிய கார்த்திக் 3வது இடத்தையும் பிடித்தனர்.

இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 19 வீரர்கள் உள்பட மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என காயமடைந்த 33 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Views: - 0

0

0