வாகனங்களுக்கு முதல் தளம்…கண்டெய்னர்களுக்கு 2ம் தளம்: நாட்டிலேயே முதல்முறையாக மதுரவாயல் – துறைமுகம் இடையே 2 அடுக்கு பறக்கும் சாலை!!

Author: Aarthi Sivakumar
29 September 2021, 5:40 pm
Quick Share

சென்னை: நாட்டிலேயே முதல்முறையாக மதுரவாயல் – துறைமுகம் இடையிலான பறக்கும் சாலை 2 அடுக்கு சாலையாக அமைய உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.

நெடுஞ்சாலைத்துறை செயலர் தீரஜ்குமார் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் முதல்முறையாக மதுரவாயல் – துறைமுகம் இடையே இரண்டு அடுக்கு பறக்கும் சாலை அமைப்பதற்கான சாலை திட்டம் அமைய உள்ளது.

மதுரவாயல் - துறைமுகம் இடையே இரண்டடுக்கு பறக்கும் சாலை: நெடுஞ்சாலைத்துறை  தகவல்| Dinamalar

அணுகுசாலை அமைக்கும் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு 3 மாதங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

இரண்டு அடுக்குகளாக அமைய உள்ள சாலையில், முதல் அடுக்கில் சென்னையின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வாகனங்களும், இரண்டாம் அடுக்கில் துறைமுகத்திற்கு நேரடியாக செல்லும் கன்டெய்னர்கள் செல்லும் வகையில் சாலை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறப்போகும் சென்னை.. ஆறுவழிச்சாலையுடன் இரண்டடுக்கு மேம்பாலம்! மத்திய அரசு  சூப்பர் முடிவு | Chennai: two-lane flyover with a six-lane road at a cost  of Rs 5,000 crore between ...

Views: - 269

0

0