மதுரையில் அறக்கட்டளை நடத்தி குழந்தைகள் விற்பனை : தலைமறைவாக இருந்த முக்கிய நபர்கள் கைது

3 July 2021, 6:35 pm
madurai idhayam trust - updatenews360
Quick Share

மதுரை: மதுரை தனியார் காப்பகத்தில் சட்டவிரோதமாக குழந்தை விற்ற விவகாரம் தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்த அறக்கட்டளை நிர்வாகிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை ரிசர்வ்லைன் பகுதியில் செயல்பட்டு வந்த இதயம் அறக்கட்டளைக்கு சொந்தமான ஆதரவற்றோர் மையத்திலிருந்து இரு குழந்தைகள் பணத்திற்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அண்மையில் அம்பலமானது. சட்டவிரோதமாக குழந்தைகளை வாங்கிய கல்மேடு பகுதியை சேர்ந்த சகுபர்சாதிக் – அனிஸ்ராணி, இஸ்மாயில்புரம் பகுதியை சேர்ந்த கண்ணன் – பவானி மற்றும் இதயம் அறக்கட்டளை மையத்தின் ஒருங்கிணைப்பாளரான கலைவாணி, முகவர்களாக செயல்பட்டு வந்த செல்வி, ராஜா என 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை தனியார் காப்பகத்தில் சட்டவிரோதமாக குழந்தை விற்ற விவகாரம் தொடர்பாக மாவட்ட சமூக நல ஆய்வாளர்கள் ஆய்வு செய்து 15 நாட்களில் அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே வழக்கின் முக்கிய குற்றவாளியான இதயம் அறக்கட்டளையின் நிறுவனர் சிவக்குமார் மற்றும் அவரது உதவியாளர் மாதார்ஷா ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், இருவரையும் கேரள எல்லையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களை மதுரைக்கு அழைத்து வந்து குழந்தை விற்பனை தொடர்பாக விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Views: - 180

0

0