பிவாண்டி 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து : பலி எண்ணிக்கை 39 ஆக உயர்வு

23 September 2020, 11:17 am
building-collapse death toll - updatenews360
Quick Share

மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே பிவாண்டியில் 3 மாடி கட்டடம் இடிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39-ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவின் பிவாண்டியில் படேல் காம்பவுண்ட் பகுதியில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது பத்து பேர் உயிர் இழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஆரம்ப அறிக்கையின்படி, 20-25 பேர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக அஞ்சுகின்றனர்.

தானே மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பிவாண்டியில் உள்ள ஜிலானி அப்பார்ட்மெண்ட் 1984’இல் கட்டப்பட்டது. 21ம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் திடீரென அந்த மூன்று மாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது. இந்த நேரத்தில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால் யாரும் உடனடியாக வெளியேறி தப்பிக்க முடியவில்லை. இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புப் படையின் (என்.டி.ஆர்.எஃப்) குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

நேற்று வரை காயங்களுடன் பலர் மீட்கப்பட்ட நிலையில், தொடர்ந்து, 3வது நாளாக மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், கட்டிட இடடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.

Views: - 8

0

0