காலியாகும் மக்கள் நீதி மய்யம் : சந்தோஷ்பாபு ஐஏஎஸ், பத்மபிரியா விலகல்.. விரக்தியின் உச்சத்தில் கமல்..!!!

13 May 2021, 1:52 pm
padma priya - updatenews360
Quick Share

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் எதிர்பார்த்தது ஏதும் நடக்கவில்லை. மாறாக, நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த வாக்குகளைக் கூட அக்கட்சியினரால் பெற முடியவில்லை. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகர் கமல் சுமார் 52 ஆயிரம் ஓட்டுகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். இதுவே, மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகபட்ச வாக்குகளாகும்.

இதற்கு அடுத்தபடியாக, கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் சுமார் 37 ஆயிரம் ஓட்டுகளும்,. சென்னை மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மபிரியா 33 ஆயிரம் வாக்குகள் பெற்றனர்.

kamal - mahendran - updatenews360

சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் அடைந்த தோல்விக்கு கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் மோசமான அணுகுமுறையே காரணம் எனக் குற்றம்சாட்டி, கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் உள்பட 10 பேர் ராஜினாமா கடித்தை கட்சியின் தலைமைக்கு அனுப்பி வைத்து விட்டனர். இது கமல்ஹாசனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிர்ச்சியில் இருந்து அவர் மீளுவதற்குள், சந்தோஷ்பாபு ஐஏஎஸ் மற்றும் பத்மபிரியா ஆகிய மேலும் இரு முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பத்மபிரியா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அன்பு நிறைந்த மதுரவாயல் தொகுதி மக்களுக்கு… என் மீது நம்பிக்கை கொண்டு எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். என்னைப் போல் எவ்வித அரசியல் பின்புலம் இல்லாத ஒரு நடுத்தர குடும்பப் பெண்ணை உங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி ஏற்றுக்கொண்டு வாக்களித்தமைக்கும் நம்பிக்கை கொடுத்து ஊக்கம் கொடுத்தமைக்கும் நான் என்றும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்.

சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதி தெரிவித்துக்கொள்கின்றேன். எனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

santhosh_babu_mnm_updatenews360

இதேபோல, சந்தோஷ்பாபு ஐஏஎஸ் கூறுகையில், “சில சொந்த காரணங்களுக்காக மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகுகிறேன் என்ற தகவலை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது அன்பும், நட்பும் கொண்ட கமல் அவர்களுக்கும், கட்சியினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” எனக் கூறியுள்ளார்.

Views: - 129

0

0