ஊழலற்ற, நேர்மையான மக்கள் நலம் காக்கும் ஆட்சி : மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை வெளியீடு

Author: Babu Lakshmanan
19 March 2021, 11:35 am
Quick Share

சென்னை : வரும் சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 6ம் தேதி தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக கடந்த 12ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. இதுவரையில் 3,000க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். முதல்முறையாக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி (40), இந்திய ஜனநாயகக் கட்சி (40) ஆகிய கட்சிகளுடன் இணைந்து களம் காண்கிறது.

கூட்டணி கட்சிகளுக்கு போக, 154 இடங்களில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை அறிவித்து, பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு வேட்பாளர்களையும் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், எப்படியாவது இந்தத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தீவிர களப்பிரச்சாரத்தையும மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் விடுத்துள்ள பதிவில், “மண், மொழி, மக்கள் காக்கும் மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் கொள்கை பிரகடனம் இது. தலைநிமிரப் போகும் நம் தலைமுறைகளுக்கான விதை,” என்ற கருத்துடன் தேர்தல் அறிக்கை தொடர்பான விபரங்களையும் வெளியிட்டுள்ளார்.

Views: - 95

0

0