வழக்கம் போல மோடிக்கு போட்டியாக மமதா…! ஓராண்டுக்கு ரேஷன் பொருட்கள் ‘ப்ரீ’….!

30 June 2020, 7:28 pm
mamata_banerjee_UpdateNews360
Quick Share

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அடுத்த ஒரு வருடத்துக்கு ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மமதா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது முக்கிய அம்சமாக, ஏழை, எளிய மக்களுக்கு மேலும் 5 மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந் நிலையில், அதிரடி நடவடிக்கைகளுக்கு எப்போதும் பெயர்போன மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி அதற்கு போட்டியாக ஒரு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

அதாவது,  மேற்கு வங்க மாநிலத்தில் ஏழை, எளியோருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச ரேஷன் பொருள்கள், 2021ம் ஆண்டு ஜூன் வரை தொடர்ந்து அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.  

ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளாக பொதுமக்கள் காலையில் 5.30 மணி முதல் 8.30 மணி வரை நடைபயிற்சி செல்லலாம், திருமண விழாவில் 50 பேரும், இறுதி சடங்கில் 25 பேர் கலந்து கொள்ளலாம் என்றும் கூறி உள்ளார்.

Leave a Reply