1989 மார்ச் 27 கருப்பு தினம்… நியாயமா டிஸ்மிஸ் பண்ணிருக்கணும்… முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சுக்கு இபிஎஸ் கண்டனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2023, 1:52 pm
EPS vs CM - Updatenews360
Quick Share

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதை அதிமுக அவசர செயற்குழு அங்கீகரித்ததைத் தொடர்ந்து, மதுரையில் ஆகஸ்ட் 20ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் எழுச்சி மாநாடு நடத்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், ஆகஸ்ட் 20ம் தேதி மதுரை வலையங்குளத்தில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தும், மதுரை மாநாட்டிற்கு வருகை தருகின்ற வாகனங்களை நிறுத்தும் இடத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

இதன்பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், அம்மா ஜெயலலிதா அவர்களுக்கு நடந்த அவதூறு ஆனது அவர்களாகவே நடத்திக் கொண்ட நாடகம் என மு.க.ஸ்டாலின் கூறியதாக கேள்வி எழுந்த நிலையில் அதற்கு பதில் அளித்த இபிஎஸ் இந்த சம்பவம் நடந்தது கிட்டத்தட்ட பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் இப்பொழுதுதான் நம்முடைய பொம்மை முதலமைச்சருக்கு ஞாபகம் வந்து வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதாக மக்கள் பார்க்கின்றனர். நமது பத்திரிக்கை செய்தி மற்றும் ஊடக செய்தியை பார்த்தாவது தெரிந்து கொண்டு பேசியிருந்தால் நாட்டு மக்கள் ஒரு நல்ல முதலமைச்சர் என்று சொல்லி இருப்பார்கள்.

இப்பொழுது, பொம்மை முதலமைச்சர் என்று அவரே நிருபித்து காட்டி விட்டார். அன்றைக்கு அவையில் மணிப்பூர் சம்பவத்தை ஒட்டி எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார்கள். அந்த நம்பிக்கையில் தீர்மானத்தில் திருமதி கனிமொழி எம்பி அவர்கள் சில கருத்துக்களை சொன்னார்.

இதில் துரியோதனன் சபையிலே திரௌபதியை துச்சாதனன் துகிலுரித்த சம்பவத்தை மேற்கோள் காட்டி, நாடாளுமன்றத்திலே கருத்துக்களை தெரிவித்தார். அதற்கு மத்திய நிதியமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்கள் 1989ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வை குறிப்பிட்டு பேசினார்

அதிலே எங்களுடைய இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்கள், அப்பொழுது அம்மா அவர்களின் அருள் ஆசியோடு எடப்பாடி சட்டமன்றத்தில் வெற்றி பெற்று, நானும் சட்டமன்ற உறுப்பினராக அவரோடு பணியாற்றக் கூடிய வாய்ப்பை பெற்றேன்.

அந்த சம்பவம் நடைபெறுகின்ற பொழுது நானும் அந்த அவையிலிருந்து பார்த்தவன் என்ற முறையில் இதை நான் தெரிவிக்கின்றேன். அந்த அவையிலே கொடூரமான முறையிலே ஒரு சட்டமியற்றும் மாமன்றத்திலே அன்றைய முதலமைச்சர் திரு. கருணாநிதி அவர்களின் கண்முன்னே பெண்ணென்று பாராமல் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்றும் பாராமல் அம்மா மீது கொடூர தாக்குதல் நடைபெற்றது.

அன்றைய முதலமைச்சர் கருணாநிதி சில கருத்துக்களை பேசுகின்ற பொழுதுதான் இந்த பிரச்சனை ஏற்பட்டது. அப்பொழுது, அம்மா அவர்கள் பேச முயற்சிக்கும் பொழுது இந்த கொடூரமான தாக்குதல் அவருடைய அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் முன்னிலையில் நடந்தது.

அன்றைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மாவை கடுமையாக தாக்கினார் அப்பொழுது திருநாவுக்கரசர் அவர்களும் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர் அவர்களும் அதை தடுத்தார்கள். அதை நான் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்.

அவர்கள் தடுத்துக் கொண்டிருக்கின்ற பொழுது இப்பொழுது இருக்கின்ற பொழுது, ஒரு மூத்த அமைச்சர் அம்மாவின் சேலையை பிடித்து இழுக்க, சில சட்டமன்ற உறுப்பினர்கள் அன்றைய தினம் அமைச்சர்களாக இருந்தவர்களும் அம்மாவின் தலை முடியைப் பிடித்திழுக்க மிகப்பெரிய ஒரு கோரமான காட்சி சட்டமன்றத்தில் அரங்கேறியது.

அன்றைய தினம் ஒரு கருப்பு நாள் என்று சொல்லலாம். இன்றைக்கும் என் மனதில் அந்த நிகழ்வு இடம் பெற்று இருக்கிறது. அன்றைய தினம் நான் சட்டமன்றத்தில் இருந்த காரணத்தினால் இதை தெரிவிக்கிறேன். அப்படிப்பட்ட கொடுமையான நிகழ்வுகள் சட்டமன்ற வரலாற்றிலேயே நடைபெற்றது இல்லை.

தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே மிக மோசமான நாள் என்று சொன்னால் 1989 மார்ச் 27 தான் ஒரு மோசமான நாள் மற்றும் ஒரு கருப்பு தினம் என்று சொல்லலாம். இதுவரை சட்டமன்றத்தில் இப்படிப்பட்ட சம்பவம் பெண் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நடந்தது இல்லை ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கும் இப்படி நடந்ததில்லை.

அப்படிப்பட்ட ஒரு கொடுமையான செயல் அன்று சட்டமன்றத்திலே அரங்கேறியது. ஆனால், இன்றைய முதலமைச்சர் அதை கொச்சைப்படுத்தி பேசுகிறார். கிட்டத்தட்ட 1989 இல் நடந்த சம்பவத்தை இன்றைக்கு பேசுகிறார். இவை எல்லாமே பத்திரிக்கை அனைத்தும் ஊடகங்களில் வந்திருக்கிறது.

சட்டமன்றத்தில் என்ன நடந்திருக்கிறது என்பதை ஊடகத்திலும் பத்திரிகைகளும் வந்த காரணத்தில் தான் மக்கள் அந்த அடுத்த தேர்தலில் அவர்களுக்கு பாடத்தை புகட்டினார்கள். இப்படிப்பட்டவர்கள் ஆட்சியில் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் 1991இல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தது.

இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா தலைமையில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தது. இதை திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் பேசினார்கள். அம்மா அவர்கள் சபதம் ஏற்றிவிட்டு வெளியே சென்றார் என்று சொன்னார்கள். அவர் கூறியது சரிதான்.

அம்மா அவர்கள் வெளியேறுகின்ற பொழுது நான் மீண்டும் சட்டமன்றத்தில் நுழைகின்ற பொழுது, தமிழக மக்களுடைய பெயர் ஆதரவோடு தமிழகத்தினுடைய முதலமைச்சராக நிச்சயம் சட்டமன்றத்தில் உள் நுழைவேன் என்று சபதம் ஏற்று விட்டு வெளியே சென்றார்

அதன்படி நாட்டு மக்கள் 1991ல் திமுகவிற்கு மிகப்பெரிய தோல்வியை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அதன் மூலமாக உண்மை வென்றது, தர்மம் வென்றது, நியாயம் வென்றது. இன்றைய தினம் முதலமைச்சர் வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டு இருக்கிறார். இது கடும் கண்டனத்திற்குரியது.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் இதற்கு தகுந்த புகட்டுவார்கள். சட்டமன்றம் உண்மையான சட்டமன்றமாக இருந்திருந்தால் இந்த நிகழ்வு நடந்திருக்காது. இந்த நிகழ்வு நடந்த பிறகு அவர் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள். அவர்களை நியாயமாக டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும்.

இன்றைய தினம் பாலியல் வன்கொடுமைகளுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது. எவ்வளவு சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. ஒரு பெண் மீது ஒரு நாட்டினுடைய முதலமைச்சர் கண்ணெதிரே சட்டத்தைப் பாதுகாக்க கூடிய ஒரு அரசாங்கம் பெண்ணென்றும் பாராமல் எதிர்க்கட்சித் தலைவர் என்றும் பாராமல் அவரை தாக்கியுள்ளனர்.

அவருக்கு என்ன தண்டனை கொடுத்தார்கள். பத்திரிக்கை ஊடகங்களிலும் இதை பெரியதாக போடவில்லை. இது எவ்வளவு கொடுமையான செயல், தன் குடும்பத்தில் ஒருவருக்கு இவ்வாறு நடந்திருந்தால், நாம் என்ன பாடுபட்டிருப்போம் என்று சிந்தித்துப் பாருங்கள்.

நம் குடும்பத்தில் தாய்க்கோ தங்கைக்கோ சகோதரி இப்படிப்பட்ட நிகழ்வு ஏற்பட்டிருந்தால் எப்படி மனம் வேதனைப்பட்டிருக்கும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட வேதனையோடு தான் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீண்டும் இந்த சட்டமன்றத்திற்குள் நுழைகின்ற பொழுது மக்களுடைய பேராதரவை பெற்று நாட்டுடைய முதலமைச்சராக வருவேன் என்று சொன்னார்.

அதேபோல மக்கள் அவருக்கு தகுந்த அங்கீகாரத்தைக் கொடுத்து அதிகமான இடங்களில் வெற்றி பெற்று, புரட்சித்தலைவி அம்மா தமிழகத்தில் முதலமைச்சராக அரியணையில் அமர்ந்தார். அப்பொழுது நானும் வெற்றி பெற்றேன். மேலும் 2021 சட்டமன்ற பொது தேர்தலில் அவர்கள் என்ன சொன்னார்கள்.

அப்பொழுது அவர்கள் எங்களுக்கு எதிர்க்கட்சியாக இருந்தனர். திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும். இப்பொழுது எங்கே ரத்து செய்துள்ளார்கள். சட்டத்தை பற்றி மக்களுக்கு தெரியாது என்பதற்காகத் தான் மக்களை ஏமாற்றினார்கள்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்து விட்டது. இந்தியாவில் இருக்கிற அனைத்து மாநிலம் நீட் தேர்வு அமல்படுத்தி விட்டார்கள். இந்த தமிழ்நாட்டில் மட்டும் எப்படி அமல் படுத்தாமல் இருக்க முடியும். மக்களை திட்டமிட்டு ஏமாற்றி, கவர்ச்சிகரமாக பேசி ஆட்சிக்கு வந்த பிறகு அந்த பல்டி அடிக்கிறார்கள்.

நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம். ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுக்கிறார். எப்படி உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்து பிறகு எப்படி இதை செயல்படுத்துவீர்கள். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக நீங்கள் செயல்பட முடியுமா? நான் செயல்பட முடியுமா? எல்லாமே சட்டத்திற்கு உட்பட்டது தான்.

அது எவ்வளவு உயர்ந்த பகுதியாக இருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டு தான் நடக்க வேண்டும். ஆனால் இவர்கள் சட்டத்தை மதிப்பதில்லை, மக்களையும் மதிப்பதில்லை, திட்டமிட்டு பொய் பேசி மக்களை ஏமாற்றி, இளைஞர்களை ஏமாற்றி, பெற்றோர்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதற்காக ஒரு நாடகத்தை அரங்கேற்றி வெற்றி பெற்ற பிறகு அந்தர் பல்டி அடிக்கிறார்கள்.

இதற்காக நாடாளுமன்றத்தில் ஏதேனும் குரல் எழுப்பினார்களா? இதே காவேரி நதிநீர் பிரச்சனை வந்தபோது, நாங்கள் கூட்டணியில் ஈடுபட்டிருந்தோம். 22 நாட்கள் தமிழ்நாட்டு மக்களுடைய உரிமைக்காக, டெல்டா பாசன விவசாயிகள், 20 மாவட்ட மக்களுக்கு காவிரி நதிநீர் குடிந்த ஆதாரமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

அந்த உரிமை தருவதற்காக 22 நாட்கள் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க எங்களுடைய குழு செயல்பட்டார்கள். இன்றைய தினம் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் ஒட்டுமொத்தமாக குரல் கொடுத்து குரல் கொடுத்து நீட் தேர்வை ரத்து செய்வதற்கு என்ன முயற்சி எடுத்தீர்கள்?

ஒரு நாலாவது குரல் கொடுத்து ஒத்தி வைக்க முடிந்ததா? அதற்கான ஒரு தைரியம் வேண்டும். மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர துடிப்பவர்களுக்கு, மக்களை பற்றிய கவலை இல்லை, ஓட்டு போட்ட மக்களை பற்றியும் கவலை இல்லை, நாட்டு மக்களை பற்றியும் கவலை இல்லை.

நாட்டை பற்றியும் கவலை இல்லை, குடும்ப ஆட்சி குடும்பம் தான் கண்ணுக்கு தெரிகிறது. குடும்பம் ஆட்சிக்கு வரனும், ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும். இதுதான் திரு ஸ்டாலினுடைய நிலைப்பாடு. என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடிப் பழனிச்சாமி கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

Views: - 169

0

0