மேலும் ஒரு ஊராட்சிமன்ற பெண் தலைவருக்கு சாதி கொடுமை : நடவடிக்கை கோரி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு..!

By: Babu
12 October 2020, 6:42 pm
mayiladudurai - updatenews360
Quick Share

மயிலாடுதுறை : சிதம்பரத்தில் சாதி பாகுபாட்டிற்கு ஊராட்சிமன்ற தலைவி பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு ஊராட்சிமன்ற பெண் நிர்வாகிக்கு கொடுமை அரங்கேறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரை மாற்று சமூகத்தை சேர்ந்த மோகன்ராஜன் தொடர்ந்து அவமதித்து வந்ததாகக் கூறப்பட்டது. இவர், ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரியை, ஊராட்சிமன்ற கூட்டங்களில் தரையில் அமர வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியை ஏற்றவும் அனுமதி மறுக்கப்பட்டது தெரிய வந்தது.

rajeshwari-updatenews360

இந்த சம்பவம் தொடர்பாக தெற்குதிட்டை ஊராட்சி செயலாளர் சிந்துஜா சஸ்பெண்ட் செய்த நிலையில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டார். மேலும், தலைமறைவாக உள்ள துணைத் தலைவர் மோகன் ராஜனை போலீசார் தேடி வருகின்றனர்.

ஊராட்சிமன்ற தலைவர் என்பதையும் மீறி ஒரு பெண்ணிடம் சாதிய அடக்குமுறைகளை ஏவி வந்த சக நிர்வாகிகளின் இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதேபோன்று மயிலாடுதுறையில் மேலும் ஒரு பெண் ஊராட்சிமன்ற நிர்வாகி பாதிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்டியலினத்தைச் சேர்ந்த 23 வயதான பிரியா பெரியசாமி மன்னம்பந்தல் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். இவருக்கு நாற்காலி தேவையா..? என சக ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் ராஜகோபால் விமர்சித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு நேர்ந்த சாதி பாகுபாட்டைக் கண்டித்து மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஊராட்சிக்கான நிதியை பெற கையெழுத்திட துணை தலைவர் மறுப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Views: - 54

0

0