மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் : அ.தி.மு.க. மேல்முறையீடு!!

22 August 2020, 5:26 pm
Quick Share

மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கில் அதிமுக சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு கோரிய வழக்கில், இது தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றும், மாணவர்களின் குறைந்தபட்ச தகுதியை மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் தீர்மானிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு தொடர்பாக திமுக ஏற்கனவே கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ள நிலையில், ஒபிசி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதில், இந்த ஆண்டே ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க. சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில், நடப்பு கல்வி ஆண்டிலேயே ஓபிசி பிரிவு மாணவர்களுக்கான 50% ஒட ஒதுக்கீடு தேவை என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 1

0

0