நாளை தொடங்குகிறது மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு : சிறப்பு பேருந்து சேவைக்கு ஏற்பாடு!
17 November 2020, 7:44 pmசென்னை : மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நாளை முதல் தொடங்க உள்ள நிலையில், மாணவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீட்டுடன் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நாளை முதல் தொடங்குகிறது. நேரு உள் விளையாட்டரங்கில் தகுந்த பாதுகாப்பு இடைவெளியுடன் தினமும் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கத்துக்கு சென்றடைய சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக வெளியூரில் இருந்து வரும் மாணவர்களின் வசதிக்காக இந்த பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு தெரிவித்துள்ளார். கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.