மேகதாது அணை விவகாரம் : தமிழக அரசுக்கு பக்கபலமாக இருப்போம்… பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதி!!!

Author: Babu Lakshmanan
29 July 2021, 11:23 am
nainar nagendhiran - updatenews360
Quick Share

சென்னை : மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கு என்றுமே பாஜக துணை நிற்கும் என்று அக்கட்சியின் துணை தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் அணை கட்டும் முயற்சியில் கர்நாடகா அரசு தீவிரமாக உள்ளது. முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா முதல் தற்போதைய முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை வரை மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், தமிழக பாஜகவும் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்தே வருகிறது.

இந்த நிலையில், கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்து தமிழக பாஜக துணை தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது ;- நீட் விவகாரத்தில் தமிழக அரசு மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று ரத்து செய்தால் எதிர்க்கமாட்டோம்.

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு துணை நிற்போம். இந்த திட்டத்தை கடுமையாக எதிர்ப்போம். தமிழக மக்களின் நலனை ஒரு போதும் விட்டு தரமாட்டோம், எனக் கூறினார்.

Views: - 328

0

0