மேகதாது அணை விவகாரம் : இன்று டெல்லி செல்கிறார் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்!!

5 July 2021, 8:54 am
Duraimurugna Delhi- Updatenews360
Quick Share

காவிரி நதி நிர் விவகாரம், மார்க்கண்டேய நதியில் அணை கட்டிய விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்த இன்று அமைச்சர் துரைமுருகன் டெல்லி செல்கிறார்.

மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும், தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதையடுத்து மேகதாதுவில் அணை கட்டுவது தமிழகத்திற்கு பாதிப்பு என்றும், பெங்களுரு குடிநீர் திட்டத்திற்காக அணை கட்டுவது என்ற கருத்தை ஏற்க முடியாது என்றும் திட்டத்தை கைவிட கோரி முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கடிதமும் அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில் மேகதாது அணை தொடர்பாக மத்திய ஜலசக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து பேச தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி செல்கிறார்.

மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறித்தும் அணைகட்ட கூடாது என்றும் இந்த சந்திப்பின் போது வலியுறுத்த உள்ளார். மேலும் கர்நாடக அரசு மார்க்கண்டேய நதியில் அணை கட்டியுள்ளதையும் எடுத்துரைக்க உள்ளார்.

Views: - 133

0

0