மெட்ரோ ரயில்நிலையத்திற்கு கருணாநிதி பெயர் சூட்டக் கோரிய மனுவை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்..!
14 September 2020, 2:15 pmசென்னை : மெட்ரோ ரயில்நிலையத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பெயரை சூட்டக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கலைஞர் தமிழ் பேரவையின் செயலர் பி. ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடந்த 1ம் தேதி ஆலந்தூ மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அறிஞர் அண்ணா பெயரையும், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரனின் பெயரையும், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ஜெயலலிதாவின் பெயரையும் சூட்டியுள்ளனர்.
அரசியல் காரணங்களுக்காக மெட்ரோ ரயில் நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயலை சூட்டவில்லை. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மூளையாக இருந்தவரின் பெயரை டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு சூட்ட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும், என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, மெட்ரோ ரயில்நிலையத்திற்கு கருணாநிதியின் பெயரை சூட்டும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது என்றும், அரசு தான் முடிவெடுக்க வேண்டும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
0
0