என்னது… எம்ஜிஆருக்கே ஐடியாவா..? சசிகலா தப்பு செய்து விட்டார்… கொந்தளிக்கும் எம்ஜிஆர் ரசிகர்கள்!!!

3 July 2021, 3:09 pm
sasikala - mgr - updatenews360
Quick Share

எம்.ஜி.ஆரின் பெயரை இழுத்து சசிகலா தவறான வி‌ஷயத்தை தொட்டிருப்பதாக எம்.ஜி.ஆரின் ரசிகரும், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யுமான கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று விடுதலையான சசிகலா, அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து, மீண்டும் எப்படியாவது அதிமுகவை கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் நாள்தோறும், தொண்டர்களிடையே பேசும் ஆடியோவை வெளியிட்டு அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார்.

அதேவேளையில், சசிகலாவுடன் பேசும் அல்லது தொடர்பு வைத்துக் கொள்ளும் கட்சி நிர்வாகிகளை அதிமுகவில் இருந்து நீக்கம் செய்து ஓபிஎஸ் – இபிஎஸ் அதிரடி காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த ராமசாமி என்பவருடன் சசிகலா பேசும் ஆடியோ ஒன்று இன்று வெளியாகியது. அதில், அவர் பேசுகையில், “எம்ஜிஆரின் அரசியல் பயணத்திலும் நான் இருக்கிறேன். இது பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. கட்சி தொடர்பாக நிறைய கருத்துக்களை என்னிடம் எம்ஜிஆர் கேட்பார். எம்ஜிஆர் தொடங்கிய கட்சி எப்போதும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். பிரிந்திருக்கக் கூடாது,” எனக் கூறியுள்ளார்.

சசிகலாவின் இந்தப் பேச்சு தமிழக அரசியலில் நகைச்சுவையையும், விமர்சனங்களையும் எழச் செய்தது.

இந்த நிலையில், எம்.ஜி.ஆரின் பெயரை இழுத்து சசிகலா தவறான வி‌ஷயத்தை தொட்டிருப்பதாக எம்.ஜி.ஆரின் ரசிகரும், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யுமான கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

kcp updatenews360

இது தொடர்பாக அவர் பேசியதாவது :- அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆரின் பெயரை இழுத்து சசிகலா தவறான வி‌ஷயத்தை தொட்டிருக்கிறார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்கள் இதை ஜீரணிக்க மாட்டார்கள். அரசியல் விவரங்கள் குறித்து எம்.ஜி. ஆருக்கு ஆலோசனை வழங்கியதாக சசிகலா கூறியது நகைச்சுவையானது.

அ.தி.மு.க.வில் மீண்டும் சேர சசிகலாவுக்கு உரிமை உண்டு. ஆனால் அவர் எம்.ஜி.ஆருக்கு அறிவுறுத்தியது, ஜெயலலிதாவுக்கு வழிகாட்டியது போன்று பேசுவது எம்.ஜி.ஆர். ரசிகர்களை எரிச்சல் அடைய செய்யும். பொய்களை சொல்லும் போது அவர்களின் வரம்பை ஒருவர் அறிந்துகொள்ள வேண்டும். சசிகலா தனது ஆதரவாளர்களுடன் எம்.ஜி.ஆர்., ஜானகி, ஜெயலலிதா பற்றி பேசுவது அ.தி.மு.க. தொண்டர்கள் இடையே கடுமையான விமர்சனத்தை உருவாக்கும், என தெரிவித்துள்ளார்.

Views: - 202

0

0