திமுகவிடம் எம்ஜிஆர் படும்பாடு : அன்று… ஸ்டாலினுக்கு பெரியப்பா!இன்று…துரைமுருகனுக்கு துரோகி!!

Author: Udayachandran RadhaKrishnan
29 September 2021, 3:41 pm
DuraiMurugan MGR -Updatenews360
Quick Share

திமுக சார்பில் 1971 முதல் 12 முறை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு அதில் 10 முறை வெற்றி கண்டவர் என்ற பெருமைக்குரியவர் திமுக பொதுச் செயலாளரும் தமிழக நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன்.

கிண்டலுக்கு சொந்தக்காரர் துரைமுருகன்

கிண்டலாக பேசுவது அவருக்கு கைவந்த கலை. சில நேரங்களில் அது எல்லை மீறிப்போய் துடுக்குத்தனமாக எதையாவது பேசி சர்ச்சையிலும் சிக்கிக் கொள்வதும் அவருடைய வழக்கம்.

DMK suspends Mylai cadre for indiscipline - DTNext.in

அப்படி அவர் பேசிய ஒரு பேச்சு எம்ஜிஆரின் தீவிர ரசிகர்களையும் அதிமுக தொண்டர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

சொசைட்டிகள் கலைக்கப்படும்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகரில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான திமுக ஆலோசனை கூட்டத்தில், அவர் பேசும்போது, “உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றால் எங்கள் செயலுக்கு ஆதரவு அளிக்கிறீர்கள் என்று பொருள். தப்பித் தவறி அதிமுக ஜெயித்துவிட்டால், 100 நாளில் திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது. தி.மு.க ஆட்சி அவ்வளவுதான் என்று அவர்கள் புலம்ப ஆரம்பித்துவிடுவார்கள்.

`எம்.ஜி.ஆர், கோபால்சாமி போன்ற துரோகிகளையே பார்த்துவிட்டோம்!’ - துரைமுருகன்

இந்தத் தேர்தலில் அ.தி.மு.க தோற்றுவிட்டால் அடுத்து வரவுள்ள சட்டப் பேரவை, நாடாளுமன்ற தேர்தல்களில் நிற்கக்கூட அவர்களுக்கு தைரியம் வராது. ஒரு பதவியை 20 பேர் கேட்கிறார்கள். அதுல ஒருவருக்குத்தான் கொடுக்க முடியும். மற்றவர்களுக்கு கொஞ்சம் வருத்தம் இருக்கும். பொதுச்செயலாளர் என்ற முறையில் அவர்களுக்கெல்லாம் ஓர் உறுதியைத் தருகிறேன்.

இந்த தேர்தல் முடிந்தவுடன் முதல் வேலை எல்லா சொசைட்டிகளையும் கலைத்துவிடுவோம். அதற்கான கையெழுத்தும் போடப்பட்டுவிட்டது. தேர்தல் காலத்தில் அறிவிக்கக்கூடாது என்று சட்டம் சொல்கிறது. எனவே, தேர்தல் ரிசல்ட் வந்த மூன்றாவது நாள் சொசைட்டிகள் கலைக்கப்படும். சர்க்கரை மில், பால்வளம் உட்பட எல்லாற்றையும் கலைப்பேன்.

உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கெல்லாம் சீட் விட்டுப்போனதோ அவர்களுக்கெல்லாம் உரிய பதவிகள் தரப்படும். யாரும் அவசரப்படாதீங்க. கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களை 24 மணி நேரத்தில் நானே கட்டம் கட்டிவிடுவேன்.

எம்ஜிஆர் துரோகி

எத்தனை காலத்துக்குத் துரோகிகளையே பார்த்துக்கொண்டிருப்பது. அண்ணா காலத்தில் சம்பத்தைப் பார்த்தோம். அதன்பின் எம்.ஜி.ஆரைப் பார்த்தோம். அப்புறம் கோபால்சாமியைப் பார்த்துள்ளோம். இனிமேல் அப்படி பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். கட்டுப்பாடுடன் இருங்கள். நமக்குத் தெரியாத தேர்தல் வித்தைகள் இல்லை.’’ என்று ஆவேசம் பொங்க பேசியிருக்கிறார்.

Durai Murugan likens Tamil Nadu budget to cotton candy | Chennai News -  Times of India

அதாவது நடைபெற இருக்கிற ஊரக உள்ளாட்சி தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டத்தில் அத்தனை இடங்களிலும் திமுக வெற்றி பெறவில்லை என்றால் என்னுடைய அணுகுமுறையே வேறு மாதிரியாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுப்பதுபோல அவருடைய பேச்சு உள்ளது. ஆனால் இதில் எதற்காக எம்ஜிஆர் பெயரை துரைமுருகன் இழுத்தார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

எம்ஜிஆரை உரிமை கொண்டாடிய ஸ்டாலின்

அதேநேரம், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ‘ஹாட்ரிக்’ அடித்து தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த எம்ஜிஆர் பற்றி, திமுக தலைவரும் இன்றைய முதலமைச்சருமான ஸ்டாலின், 8 மாதங்களுக்கு முன்பு என்ன பேசினார் என்பதையும் கொஞ்சம் நினைவு கூர்வோம்.

2021 தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, அதாவது கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி, ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டைக்கு வந்திருந்தார். அப்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்னோட்டமாக ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் ஒவ்வொரு தொகுதியிலும் பொதுமக்களிடமிருந்து புகார் மனுக்களை அவர் பெற்றுக்கொண்டிருந்த நேரம், அது.

MK Stalin paves way for new culture, pays homage to Jaya

அப்போது அந்தக் கூட்டத்தில் பரபரப்பான ஒரு தகவலையும் அவர் வெளியிட்டார். ஸ்டாலின் பேசும்போது, “நேற்று நான் ‘இந்தியா டுடே’-வுக்கு ஒரு பேட்டி கொடுத்தேன். அப்போது என்னை பேட்டி எடுக்க வந்த ஒரு பெண் நிருபர் என்னிடத்தில், எம்.ஜி.ஆரும் நானும் இருக்கும் புகைப்படத்தைக் காண்பித்து, இதன் பின்னணி என்ன? ஞாபகம் இருக்கிறதா? என்று கேட்டார்.

வரலாற்று வெற்றியை படைத்த திமுக

அப்போது நான், நன்றாக நினைவிருக்கிறது. அண்ணாவின் மறைவிற்குப் பிறகு 1971-ம் ஆண்டு நடைபெற்ற சட்டபேரவைத் தேர்தல் கலைஞர் தலைமையில் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் 184 இடங்களில் வெற்றி பெற்று – இதுவரை தமிழ்நாட்டில் யாரும் பெற முடியாத வரலாற்று வெற்றியைப் பெற்று ஆட்சி அமைத்த ஒரே கட்சி திமுகதான். கலைஞர் தலைமையில் ஆட்சி அமைந்தது.

Jaya had her revenge, but Karunanidhi won the war - Rediff.com India News

அந்தத் தேர்தலுக்கு நான் பிரச்சார நாடகம் நடத்தினேன். ‘முரசே முழங்கு’ என்ற அந்த நாடகத்தில் எனக்கு கலைஞர் வேடம். அதுதான் அந்தப் புகைப்படம்.

அந்த தேர்தலுக்குப்பிறகு வெற்றி விழா நடத்த முடிவு செய்து, அதற்காக தலைவரிடமும், எம்.ஜி.ஆரிடமும் தேதி வாங்கினேன். நடித்த நடிகர்களை பாராட்டி மோதிரம் போடவேண்டும் தலைவர் அவர்கள். எம்.ஜி.ஆர். அவர்கள் எங்களைப் பாராட்டி சான்றிதழ் கொடுக்கவேண்டும். அந்த விழாவிற்கு “வெற்றி விழா” என்று நான் தலைப்பிட்டேன்.

அதற்கு கலைஞர் அவர்கள் ‘நிறைவு விழா’ என்று போடச் சொன்னார். ஏனென்றால் “நான் தான் ஒழுங்காக படிக்காமல் விட்டு விட்டேன். நீயாவது கொஞ்சம் படிக்க வேண்டும்” என்று எனக்கு அறிவுரை சொல்லி அவ்வாறு செய்தார்.

நான் உன் பெரியப்பா

நாடகம் நடக்கிறது. அப்போது தலைவர்கள் எல்லாம் பேசினார்கள். அப்போது எம்.ஜி.ஆர். அவர்கள் பேசிய போது, “நான் உன் பெரியப்பாவாக சொல்கிறேன் கேள். ஒழுங்காக படித்து, இப்போது எந்த அளவிற்கு அரசியலில் ஆர்வமாக இருக்கிறாயோ அதே அளவிற்கு இனிமேலும் இருக்க வேண்டும்” என்று அறிவுரை சொன்னார்” என்று ஸ்டாலின் பெருமிதத்துடன் குறிப்பிட்டு இருந்தார்.

எம்ஜிஆரால் ஆட்சியை பிடிக்க முடியாமல் தவித்த திமுக

இந்த இரு நிகழ்வுகளையும் ஒப்பிட்டு அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் கூறும்போது, “தான் உயிருடன் இருக்கும் வரை கருணாநிதியை எதிர்த்து அரசியல் நடத்தியவர் எம்ஜிஆர்.1977 முதல் 1987 முடிய தொடர்ந்து 10 வருடங்கள் தமிழகத்தை ஆட்சி செய்தார். 1980 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதால் கருணாநிதியின் தூண்டுதலால் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அதிமுக ஆட்சியை கலைத்தார். ஆனாலும் சட்டப்பேரவை தேர்தலில் எம்ஜிஆர் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார். அதன் பிறகு அவர் மரணம் அடையும் வரை கருணாநிதியால் ஆட்சியை பிடிக்கவே முடியவில்லை.

எம்ஜிஆர் மீது வன்மம் காட்டும் துரைமுருகன்

இந்த ஆழமான வடு எம்ஜிஆர் மறைந்து 34 ஆண்டுகள் ஆகியும் துரைமுருகனை விட்டு இன்னும் அகலவில்லை போலிருக்கிறது. அதனால்தான் எம்ஜிஆர் இன்று உயிரோடு இல்லாத நிலையிலும் அவர் மீது வன்மம் காட்டுகிறார்.

Will Durai Murugan be DMK's new General Secretary? | Deccan Herald

திமுக தலைவர் ஸ்டாலின் கூட எம்ஜிஆர் எனது பெரியப்பா மாதிரி என்று பெருந்தன்மையுடன் கூறினார். அதன்பிறகு திமுகவினர் யாரும் எம்ஜிஆரை இகழ்ந்து பேசவில்லை.

துரைமுருகனுக்கு அருகதை இல்லை

உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்காக துரைமுருகன் தனது கட்சி நிர்வாகிகளிடம் எப்படி வேண்டுமானாலும் பேசி விட்டுப் போகட்டும். ஆனால் பழைய விஷயங்களையெல்லாம் மறந்துவிட்டு ஸ்டாலின் பாராட்டிய பிறகும் எம்ஜிஆரைப் பற்றி அவதூறு பேசுவதற்கு துரைமுருகனுக்கு எந்த அருகதையும் இல்லை.

அவர் இப்படி பேசுவது என்னை கேள்வி கேட்க யாருமே கிடையாது என்று அகந்தையில் கூறுவதுபோல் உள்ளது.

Districts want DMK to retain winnable seats - DTNext.in

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளநிலை. முதுநிலை பட்டப்படிப்பு படித்தபோதும், சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். படித்தபோதும் 6 ஆண்டுகள் துரைமுருகனின் படிப்பு செலவை எம்ஜிஆர் ஏற்றுக் கொண்டிருந்தார். இதை துரைமுருகனே பல மேடைகளில் கூறியும் இருக்கிறார். அதுமட்டுமின்றி கல்லாக இருந்த என்னை எம்ஜிஆர்தான் சிலையாக ஆக்கினார் என்றும் பேசியுள்ளார்.

எம்ஜிஆரின் ஆன்மா மன்னிக்காது

அந்தவொரு நன்றிக் கடனுக்காவது எம்ஜிஆரை பற்றி துரைமுருகன் இனி இகழ்ச்சி பேசாமல் இருப்பது நல்லது. இல்லையென்றால் எம்ஜிஆரின் ஆன்மா அவரை மன்னிக்கவே செய்யாது.

Karunanidhi passes away: Scriptwriter par excellence, DMK chief was astute  politician and 5-time CM - Photos News , Firstpost

எம்ஜிஆரை அவதூறாக பேசிய துரைமுருகனை உடனடியாக ஸ்டாலின் கண்டிக்கவேண்டும் இல்லையென்றால் அவர் எம்ஜிஆரை தன் பெரியப்பா என்று தேர்தல் நேரத்தில் சொன்னதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்” என்று அந்த நிர்வாகிகள், தங்களது மன வேதனையை கொட்டித் தீர்த்தனர்.

Views: - 409

1

0