ரோஹித் ஷ்ர்மா மீது இருந்த கோபத்தை வெளிப்படுத்திய கோலி..! கோலியின் செயலால் அதிருப்தியடைந்த ரசிகர்கள்

29 October 2020, 10:49 pm
Quick Share

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கும் (ஆர்.சி.பி) மும்பை இந்தியன்ஸுக்கும் (எம்.ஐ) இடையிலான போட்டியை இடுங்கள், சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இடையிலான ‘ஸ்டாரிங் போட்டி’ தற்போது மிகப்பெரிய பேசும் இடமாக மாறியுள்ளது.

நேற்று பெங்களூர் அணிக்கு எதிராக மும்பை அணியின் வீரர் சூர்ய குமார் யாதவ் அதிரடியாக ஆடி 43 பந்தில் 79 ரன்கள் எடுத்து அசத்தினார். அவரை இந்திய அணியில் எடுக்காத தேர்வு குழுவிற்கு பதில் அளிக்கும் விதமாக நேற்று அவருடைய ஆட்டம் இருந்ததாக ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். அதிலும் நேற்று மைதானத்தில் யாதவிற்கும் கோலிக்கும் இடையே பல முறை உரசல்கள் ஏற்பட்டது. கோலி இவரை முறைப்பதும், சூர்யா குமார் பதிலுக்கு கோலியை முறைப்பதும் மைதானத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

விராட் கோலியின் இந்தச் செயலால் அதிருப்தியடைந்த கிரிக்கெட் ரசிகர்கள், தற்போது விராட் கோலிக்கு எதிராகக் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இந்திய அணிக்காக இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடாத ஒருவரிடம் இப்படியா நடந்து கொள்வீர்கள், இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ஒருவர் செய்யக் கூடிய செயலா இது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தநிலையில் ரோஹித் ஷ்ர்மா மீது இருந்த கோபத்தை நேற்று விராட் கோலி மும்பை வீரர்கள் மீது காட்டினார் என்று கூறப்படுகிறது.

கோலிதான் ஏதோ அரசியல் செய்துவிட்டார் என்றும் அவரால்தான் இந்திய அணியில் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை என்றும் ரசிகர்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். தொடர் விமர்சனங்கள் காரணமாகதன் சூர்யாகுமார் யாதவ் மீது கோலி கோபத்தை காட்டினார் என்று கூறப்படுகிறது. அதேபோல் மும்பை வீரர்களும் தொடர்ந்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வந்தனர். அதில் க்றிஸ் மோரிஸ் உடன் ஐபிஎல் விதிகளை மீறும் அளவிற்கு ஹர்திக் பாண்டியா சண்டை போட சென்றார்.