அமித்ஷா வருகையால் பரபரப்பில் தமிழக அரசியல் களம்!! அழகிரியுடன் பேச்சு நடக்குமா? ரஜினியை அரசியலுக்கு இழுப்பாரா?
20 November 2020, 9:30 pmசென்னை : மத்திய அமைச்சர் அமித் ஷா நாளை தமிழகம் வருவதால் அதிமுகவுடன் பாஜக கூட்டணி முடிவாகுமா என்ற பரபரப்பு தொற்றியுள்ளது. அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் கலந்துகொள்ளும் அமித்ஷா தனிப்பட்ட முறையில் முதல்வரை சந்தித்துப் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பும், நடிகர் ரஜினிகாந்தையும், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மகன் மு.க. அழகிரியையும் அமித்ஷா சந்திப்பாரா என்ற ஆவலும் எழுந்துள்ளது.
அண்மைக்காலமாக தமிழக பாஜக தலைவர்கள் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் யாத்திரை நடத்துவதும் மாநில ஆட்சியில் பாஜகவும் பங்குபெறும் என்றும் கூறிவருகிறார்கள். அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை மத்திய அதிமுக தலைமை முடிவெடுக்கும் என்றும் சொல்லிவருகிறார்கள். அதிமுகவுடன் பாஜக உறவை சுமூகமாக்கி தேர்தல் கூட்டணியை அமைப்பதில் அமித்ஷா தனது சாணக்கியத்தனத்தைக் காட்டுவார் என்று அரசியல் நோக்கர்கள் அனைவரும் ஆர்வத்துடன் நாளைய அரசியல் நிகழ்வுகளை உற்றுநோக்கிவருகிறார்கள்.
இதன் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த பா.ஜனதா சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணியை தொடர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாகவே கருதப்படுகிறது. கடற்கரையை ஒட்டியுள்ள லீலாபேலஸ் ஓட்டலுக்கு சென்று தங்கும் அமித்ஷா அங்கு மதிய உணவு அருந்துகிறார். அந்த ஓட்டலில் வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க. முன்னணி தலைவர்கள் அமித்ஷாவை சந்தித்துப்பேசுவார்கள் என்று நம்பப்படுகிறது. அதிமுக தலைவர்களை சந்தித்து கூட்டணியை நிச்சயம் அமித்ஷா உறுதிசெய்வார் என்று பாஜகவினர் கூறுகின்றனர்.
அ.தி.மு.க. தலைவர்களுடனான இந்த சந்திப்பு முடிந்த பிறகு கலைவாணர் அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் அமித்ஷா பங்கேற்று விட்டு மீண்டும் லீலாபேலஸ் ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு மாலையில் பா.ஜனதா நிர்வாகிகளுடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் பற்றியும், தமிழக நிர்வாகிகளிடம் அமித்ஷா கேட்டறிகிறார். பா.ஜனதா வேல் யாத்திரை பற்றியும் அமித்ஷாவிடம் தமிழக நிர்வாகிகள் விளக்கி கூறுவார்கள். இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா தனது அறிவுரையை வழங்குவார் என்று தெரிகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்தை எப்படியும் களம் இறக்கி விட வேண்டும் என்பதில் மத்திய பா.ஜனதா தலைவர்கள் தீவிரமாக இருக்கின்றனர். தி.மு.க.வை வீழ்த்துவதற்கு ரஜினியே மிகப்பெரிய பலமாக இருப்பார் என்று பா.ஜனதா நம்புகிறது. இதன் காரணமாக ரஜினியை அரசியலுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் அக்கட்சி தீவிரமாக உள்ளது. இதற்காக சென்னை வரும் அமித்ஷா, ரஜினிகாந்தை சந்தித்து பேசவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சந்திப்பு நடைபெறும் இடம் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை நேரில் சந்திக்க வாய்ப்பு இல்லாவிட்டால் வீடியோ கால் வழியாக ரஜினியுடன் பேச அமித்ஷா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் தொடர்பாக அழகிரி முக்கிய முடிவை எடுப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவில் சேரும்படி அழகிரிக்கு, தமிழக பாஜக தலைவர் முருகன் நேரடியாகவே அழைப்பு விடுத்தார். பா.ஜனதாவுக்கு அழகிரி வந்தால் வரவேற்போம் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் சென்னை வரும் அமித்ஷாவை, அழகிரி சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக மதுரையில் இருந்து அழகிரி காரில் இன்று சென்னை புறப்பட்டு வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. குறைந்தபட்சம் வீடியோகால் பேசுவார் என்று கூறப்படுகிறது. அமித்ஷா- அழகிரி சந்திப்பு நடந்தால் திமுகவை நன்றாக அறிந்தவர் என்ற முறையில் அழகிரி நல்ல திட்டங்களைக் கூறமுடியும் என்றும், திமுகவில் குறிப்பிட்ட அளவு பிளவை ஏற்படுத்தி அதை பலவீனப்படுத்த முடியும் என்று நம்பப்படுகிறது.
கொரோனாப் பாதிப்பாலும் அதைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட ஊரடங்காலும் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி கடும் சவால்களை சந்தித்தது. அதையும் மீறி சரியான தேர்தல் உத்தியாலும் ராஜதந்திர அணுகுமுறையாலும் பீகாரில் பாஜக முதல்வர் நித்தீஷ் குமாரின் கட்சியைவிட அதிக இடத்தில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
தமிழகத்திலும் திமுகவைத் தோற்கடித்து அதிமுக கூட்டணியை பதவியில் அமர்த்த வேண்டும் என்பதிலும் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட அளவு தொகுதிகளில் பாஜக வெற்றிபெற வேண்டும் என்பதிலும் அமித்ஷா தீவிரமாக இருக்கிறார். அவரது வருகை தமிழக அரசியலில் எப்படிப்பட்ட மாற்றத்தை நிகழ்த்தப்போகிறது என்று அனைவரும் நாளைய நிகழ்வுகளை உற்று கவனிக்கத் தொடங்கியுள்ளனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரும் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அதிமுக ஒருமனதாக அறிவித்துள்ளது. இதை ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி என்றும் அதிமுக அறிவித்துவிட்டது. ஆனால், கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜகவின் மத்திய தலைமைதான் முடிவுசெய்யும் என்று சொல்லிவருகிறார். இதனால், வரும் தேர்தலில் பாஜக தனித்துப்போட்டியிடுமா அல்லது கூட்டணி சேருமா என்பது இதுவரை தெரியவில்லை. கூட்டணி அமைத்தால் யாருடன் கூட்டணி என்றும் இதுவரை முடிவுசெய்யப்படாத நிலை இருக்கிறது. ஆனால், அமித் ஷாவின் வருகைக்குப் பிறகு அதிமுக-பாஜக கூட்டணியில் இருக்கும் நெருடல்கள் சரியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனாப் பாதிப்பையும் சட்டம் ஒழுங்கையும் கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசுக்கு சங்கடமான நிலையை வேல் யாத்திரையால் உருவாக்கிவரும் தமிழக பாஜக தலைவர்களை மத்திய அமைச்சர் நெறிப்படுத்துவார் என்று கருதப்படுகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் கணிசமான சீட்டுகளை குறைந்தது 40 இடங்களைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் அக்கட்சி தலைவர்கள் உறுதியாக உள்ளனர். அதே நேரத்தில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டு பெற்று அதில் களமிறங்கி, வெற்றித் தாமரையை பறிக்கவும் அந்தக்கட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான சாணக்ய வியூகத்தையே நாளை அமித்ஷா தொடங்க இருக்கிறார்.
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு பா.ஜனதா பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது. இதற்காக பாராளுமன்ற தேர்தலில் அமைந்த அதே கூட்டணியை அப்படியே தொடரவும் பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. கூட்டணியில் உள்ள தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட பெரிய கட்சிகள் கூட்டணியை விட்டு வெளியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதிலும் அக்கட்சி உறுதியாக உள்ளது. இதுதொடர்பாகவும் அதிமுகவுடன் விவாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது.
தமிழகத்திலும் திமுகவைத் தோற்கடித்து அதிமுக கூட்டணியை பதவியில் அமர்த்த வேண்டும் என்பதிலும் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட அளவு தொகுதிகளில் பாஜக வெற்றிபெற வேண்டும் என்பதிலும் அமித்ஷா தீவிரமாக இருக்கிறார். அவரது வருகை தமிழக அரசியலில் நிகழ்த்தப்போகிறது என்று அனைவரும் நாளைய நிகழ்வுகளை உற்று கவனிக்கத் தொடங்கியுள்ளனர்.
0
0
1 thought on “அமித்ஷா வருகையால் பரபரப்பில் தமிழக அரசியல் களம்!! அழகிரியுடன் பேச்சு நடக்குமா? ரஜினியை அரசியலுக்கு இழுப்பாரா?”
Comments are closed.