டெல்லி பயணம் சக்ஸஸ்… மேகதாது அணைக்கு வாய்ப்பே இல்ல… மத்திய அரசு மீது துரைமுருகன் நம்பிக்கை!!

6 July 2021, 1:16 pm
durai murugan - updatenews360
Quick Share

தமிழகத்திற்கு தண்ணீர் சிக்கலை ஏற்படுத்தும் மேகதாது அணையை கட்ட மத்திய அரசு அனுமதியளிக்காது என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கு இடையே காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது.

மேகதாது அணை கட்டுவதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கிடையே மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் கடிதம் அனுப்பிய மு.க.ஸ்டாலின், மேகதாது திட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையே மேகதாது அணை விவகாரம் குறித்து மத்திய அமைச்சரை சந்தித்து பேசுவதற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று டெல்லி சென்றார்.
,
இந்த நிலையில், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது மேகதாது அணை விவகாரம், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடகம் வழங்காமல் இருப்பது போன்ற விஷயங்கள் குறித்து மத்திய அமைச்சரிடம் விவாதித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் : மேகதாது அணைக்கட்ட வேண்டும் என்றால், தமிழக அரசின் கருத்தை கேட்காமல் மத்திய அரசு அனுமதியளிக்காது என மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளார். கர்நாடகா அரசு ஒப்புதல் வாங்கிவிட்டால் மட்டுமே அணையை கட்டிவிட முடியாது.

மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்க கோரிக்கை விடுத்துள்ளோம். தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டியிருப்பது தொடர்பாக புகார் அளித்துளோம், எனக் கூறினார்.

Views: - 98

0

0