மே 2க்கு முன்பு தபால் வாக்குப்பெட்டிகள் மீது கை வைக்கக் கூடாது : தேர்தல் அதிகாரியிடம் அதிமுக முறையீடு

22 April 2021, 5:00 pm
jayakumar - updatenews360
Quick Share

சென்னை : வாக்கு எண்ணும் நாளான மே 2ம் தேதிக்கு முன்பு தபால் வாக்குகளை எண்ணக் கூடாது என்று தேர்தல் அதிகாரியிடம் அமைச்சர் ஜெயகுமார் மனு அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 2ம் தேதி எண்ணப்படுகிறது. கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில், மருத்துவ விதிகளுக்குட்பட்டு, வாக்குகளை எண்ணும் பணியை சுமூகமாக நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக, அரசியல் தலைவர்கள், சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தர நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை அமைச்சர் ஜெயகுமார் நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளார். அப்போது, அவர் கூறியிருப்பதாவது :- மக்கள் பிரதிந்தித்துவ சட்டத்தின்படி, வாக்கு எண்ணும் நாளில் மட்டுமே தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும். அதற்கு முன்னதாக எண்ணப்படக்கூடாது. கடந்த கால வழிமுறைகள்தான் கடைப்பிடிக்க வேண்டும்.

மே 1 ஆம் தேதியே தபால் வாக்குகள் கட்டுக்கள் பிரிக்கப்பட்டு வரிசைப்படுத்தி வைக்க உள்ளதாக சில மாவட்டங்களில் இருந்து அதிமுக வேட்பாளர்கள் புகார் அளித்துள்ளார்கள். இது தொடர்பாக புகார் அளித்துள்ளோம். யாரும் எவ்வித குறையும் சொல்லாத அளவுக்கு தேர்தல் ஆணையம் செயல்படும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. வாக்கு எண்ணும் மேசைகள் எந்த காரணம் கொண்டும் குறைக்கக்கூடாது, என தெரிவித்தார்.

Views: - 189

0

0