‘இங்க ஒரு கால், அங்க ஒரு கால்’: அதிமுக பிரமுகர்களுக்கு வார்னிங் கொடுத்த ஜெயக்குமார்!!

14 January 2021, 3:32 pm
Jayakumar -Updatenews360
Quick Share

சென்னை: கட்சியில் இருந்து கொண்டு சசிகலாவுக்கு ஆதரவாக பேசிய முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவோடு துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா. அவரை யாரும் தவறாக பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாது என முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா நேற்று சென்னையில் பேசி இருந்தார்.

rajendra balaji - updatenews360

இந்நிலையில் சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கட்சியில் இருந்து கொண்டு சசிகலாவுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேசக்கூடாது. கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பதை ஏற்க முடியாது. சசிகலா வருகை அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

gokula-indra-updatenews360

ராஜேந்திரபாலாஜி தெளிவில்லாமல் இருக்கிறார். அமமுகவினருடன் நமக்கு எந்த உறவும் கிடையாது. அதிமுக அமமுக தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்தை ஏற்க முடியாது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுவதை எல்லாம் கட்சி பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 11

0

0