உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகனுக்கு கொரோனா உறுதி : மியாட் மருத்துவமனை அறிக்கை

30 June 2020, 5:33 pm
k-p-anbalagan - updatenews360
Quick Share

சென்னை : தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரையில் 86 ஆயிரத்தையும் கடந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. அதிகபட்சமாக, சென்னையில் மட்டும்தான் பெரும்பாலான தொற்றுகள் கண்டறியப்பட்டு வருகிறது.

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் உள்பட சுகாதாரப் பணியாளர்களோடு, எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் அதிகாரிகள் என பல்வேறு அரசு நிர்வாகிகளும் இந்த நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அண்மையில், தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால், இந்த தகவலை அவர் முற்றிலும் மறுத்து வந்தார். தனக்கு சாதாரண சளி மற்றும் காய்ச்சல் என்றும், தற்போது அதில் இருந்து குணமடைந்து விட்டதாகவும் கூறி வந்தார்.

இந்த நிலையில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு, தற்போது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply