புதிய கல்வி கொள்கை குறித்து 17ம் தேதி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை..!!!

15 May 2021, 12:25 pm
Ramesh_Pokhriyal_UpdateNews360
Quick Share

டெல்லி : புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது குறித்து வரும் 17ம் தேதி மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை நடத்த உள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை வரும் கல்வியாண்டில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், இது தொடர்பாக அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வரும் 17 ம் தேதி காணொளி காட்சியின் மூலம் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

மேலும், இந்தக் கூட்டத்தில் கொரோனா அச்சுறுத்தல் நிலவி வருவதால், ஆன்லைன் வகுப்பு நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட இருக்கிறது.

தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை எக்காரணத்திலும் அமல்படுத்த விடமாட்டோம் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த வாரம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 123

0

0