பள்ளிகள் திறக்கப்படுகிறதா…? அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை

18 August 2020, 2:11 pm
Quick Share

சென்னை: பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பல மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாள் தோறும் உயர்ந்து வருகிறது. அதன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன.

ஊரடங்கு இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. அதன் பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது பற்றிய தகவல்கள் வெளியாக வில்லை. தமிழகத்தில் 4 மாதங்களாக பள்ளிகள் திறக்கப் படவில்லை.

10ம் வகுப்பு தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. மாணவர்களுக்கு தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரியாததால் மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பத்தில் உள்ளனர்.

மத்திய அரசு டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்புகள் இல்லை என்று கூறிவிட்டது. இந் நிலையில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன்  ஆலோசனை நடத்தினார்.

இந்த முக்கிய ஆலோசனையானது தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை செயலாளர், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். பள்ளிகள் திறப்பு, இப்போதுள்ள கொரோனா சூழல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

Views: - 28

0

0