உன் பேர் என்ன…? அனல் மின்நிலையம்.. இனிமேல் நீ அணில்மின் நிலையம்…!! வைரலாகும் அணில் – கரண்ட் மீம்ஸ்கள்..!!

23 June 2021, 1:27 pm
Quick Share

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து, மின்வெட்டு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. ஊரடங்கு சமயத்தில் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய சூழலில் ஏற்படும் மின்தடையினால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது.

இதனிடையே, ஊரடங்கு முடியும் வரையில் மின்வெட்டு ஏற்படாது என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். ஆனால், தமிழகத்தில் மின்வெட்டு தவிர்க்க முடியாததாகி விட்டது. பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தமிழகத்தில் மின்தடை ஏற்படுவதற்கான காரணம் குறித்து அமைச்சர் செந்தில் பாலராஜி கூறியது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. அதாவது, மின்கம்பிகளில் அணில்கள் செல்வதால், உரசல் ஏற்பட்டு மின்தடை ஏற்படுவதாக தெரிவித்தார். அமைச்சரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

twitter squirrel - updatenews360

தமிழகத்தில் நேற்று அணில்கள் பற்றிய பேச்சுக்களே பரவலாக இருந்தது. அதேபோல, சமூக வலைதளங்களில் அணில்களை மையப்படுத்தி காரசார விவாதமும் நடந்து வருகிறது. அதோடு, #அணில்தான்_காரணம் என்னும் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து திமுகவினரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், மின்வெட்டுக்கு நாங்கள்தான் காரணமா..? என்று அணில் கேட்கும் விதமாக மீம்ஸ்களை உருவாக்கி சமூக வலைதளங்களல் உலாவிட்டுள்ளனர் மீம்ஸ் கிரியேட்டர்கள். அதில் ஒருசில சிறந்த மீம்ஸ்களை தற்போது காணலாம்.

Views: - 332

0

0