ஜாமீன் கிடைக்குமா..? அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு ; வரும் 12ம் தேதி வெளியாகப் போகும் தீர்ப்பு

Author: Babu Lakshmanan
9 January 2024, 2:57 pm
Quick Share

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த ஜாமீன் மனு மீது வரும் 12ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பல்வேறு ஜாமீன் மனுக்கள் அவர் தாக்கல் செய்த நிலையில், அதனை சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் நிராகரித்துள்ளது. இதனால், சுமார் 200 நாட்களுக்கு மேலாக அவர் புழல் சிறையில் இருந்து வருகிறார்.

இதனிடையே, ஜாமீன் கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும், தன்னுடை உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, ஜாமீன் வழங்க அமலாக்கத்துறையும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இரு தரப்பின் வாதத்தையும் கேட்ட நீதிபதி அல்லி, வழக்கின் தீர்ப்பு 12ம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்தார்.

Views: - 188

0

0