கொங்கு மண்டலத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்…. அமைச்சர் செந்தில் பாலாஜி போட்ட மாஸ்டர் பிளான் : அப்செட்டில் மாவட்ட பொறுப்பாளர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 August 2022, 6:01 pm
Senthil Balaji - Updatenews360
Quick Share

முதல்வர் ஸ்டாலின் கோவைக்கு சென்றுள்ளார். 3 நாள் பயணமாக அவர் கொங்கு மண்டலத்தில் பல்வேறு ஆலோசனைகள் நடத்த உள்ளார். நாளை திருப்பூர் சென்று அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மறுநாள் ஈரோடு செல்லும் முதல்வர் ஸ்டாலின் அங்கு பல்வேறு ஆய்வுகளை செய்கிறார்கள்.

நேற்று இரவு கோவை விமான நிலையம் வந்து அங்கிருந்து அரசினர் விருந்தினர் மாளிகை செல்லும் வழி வரை முதல்வர் ஸ்டாலினை வரவேற்க நிர்வாகிகள் பலரும் குவிந்து இருந்தனர்.

திமுக தொண்டர்கள், பொதுமக்கள் பலர் அவரை சந்திக்க காத்து இருந்தனர். இதனால் அவரின் கார் 10 நிமிடத்தில் விருந்தினர் மாளிகைக்கு செல்வதற்கு பதிலாக கிட்டத்தட்ட 1 மணி நேரம் மக்கள் வெள்ளத்தில் ஊர்ந்து சென்றது.

இன்றும் கூட அதேபோல்தான் கோவையில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்விற்கு முதல்வர் ஸ்டாலினை வரவேற்க கூட்டம் அதிகமாக இருந்தது.

விழா நடக்கும் நிகழ்விற்கு அவர் செல்ல நீண்ட நேரம் ஆனது. மக்கள் இவரை சூழ்ந்து கொண்டதால் வாகனம் நகர்ந்தது. இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகள், தான் வரவேற்கப்பட்ட விதம் அனைத்தையும் பார்த்து முதல்வர் ஸ்டாலின் சந்தோஷத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இன்று மேடையில் கூட.. 10 நிமிடத்தில் வர வேண்டிய நான் 1 மணி நேரத்திற்கும் மேலாக மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தேன். உங்களின் இந்த ஆதரவு என்னை வியக்க வைக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் பாராட்டி இருந்தார்.

அதோடு மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் மாநாடும் பிரம்மாண்டமாக நடந்தது. இதற்கான ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஏற்பாடுகள் அனைத்தையும் பார்த்த முதல்வர் ஸ்டாலின் சந்தோஷத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்காக பயணத்திற்கு இடையே.. ஏற்பாடுகள் எல்லாம் நன்றாகவே இருக்கே என்று செந்தில் பாலாஜியை பாராட்டினார் என்றும் கூறப்படுகிறது. மாற்று கட்சியினர் 50 ஆயிரம் பேர் இன்று திமுகவில் இணைகிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளையும் செந்தில் பாலாஜிதான் மேற்கொண்டார். இதன் காரணமாக ஸ்டாலின் அவரை பாராட்டியதாக கூறப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க கோவை மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் சிலர் செந்தில் பாலாஜி மீது அப்செட்டில் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

5 மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ள நிலையில்.. மாவட்ட பொறுப்பு அமைச்சர் மட்டும் அனைத்து நல்ல பெயர்களையும் எடுக்கிறார். முதல்வரிடம் அவர்தான் நெருக்கமாக இருக்கிறார்.முதல்வரிடம் நாம் நெருங்கவே முடியவில்லையே என்று அப்செட்டில் சிலர் இருக்கிறார்களாம்.

5 மாவட்ட பொறுப்பாளர்களில் 3 மாவட்ட பொறுப்பாளர்கள் செந்தில் பாலாஜி மீது வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு மாவட்ட சீரமைப்பு செய்து கோவை 3 மாவட்டங்களாக மாற்றப்பட வாய்ப்புகள் உள்ளன.

அப்படி செய்யப்படும் போது தங்களுக்கு எதிராக செந்தில் பாலாஜி காய் நகர்த்தி, தனக்கு ஆதரவாக உள்ளவர்களை அவர் மாவட்ட செயலாளர்களாக நியமிக்க பரிந்துரை செய்வார் என்றும் சில மாவட்ட பொறுப்பாளர்கள் அச்சத்தில் இருக்கிறார்களாம்.

Views: - 606

0

0