விபரீத முடிவுகளை மாணவர்கள் கைவிட வேண்டும்… நீட் தேர்வுக்கு விலக்கு பெற நடவடிக்கை – அமைச்சர் சிவசங்கர் அட்வைஸ்..!!

Author: Babu Lakshmanan
14 September 2021, 11:24 am
neet kanimozhi suicide - updatenews360
Quick Share

நீட் தேர்விற்கு எதிரான மசோதாவிற்கு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற்று தமிழகத்திற்கு விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்

அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகள் கனிமொழி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 562 மார்க் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவி கனிமொழி நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை எழுதியுள்ளார் இந்நிலையில் நீட் தேர்வு கடினமாக இருந்ததால் சரியாக எழுதவில்லை என தந்தையிடம் கூறி மன உளைச்சலில் இருந்த மகளை தந்தை தேற்றியுள்ளார் எனினும் மருத்துவ கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் நேற்று தனிமையில் வீட்டில் இருந்த கனிமொழி வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்நிலையில் மாணவியின் உடலுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் அஞ்சலி செலுத்தினார். அப்போது, அவர் பேசியதாவது :- நீட் தேர்வுக்கு எதிரான மசோதாநேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இம்மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற செயல்களை மாணவ-மாணவிகள் ஈடுபடாமல் மனதை திடப்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் இதற்காக மனதளவில் மாணவ மாணவிகள் தயார்படுத்திக்கொள்ள வேண்டும், என கூறினார்.

Views: - 258

0

0