கேரள சூப்பர் ஸ்டாரின் வீட்டை அமைச்சரின் வீடு என்பதா..? திமுகவினரின் பொய் பிரச்சாரத்திற்கு கோவை அதிமுக கடும் கண்டனம்..!

Author: Babu
5 October 2020, 12:47 pm
Quick Share

தமிழக சட்டப்பேரவைக்கு இன்னும் 7 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக பலமில்லாமல் போய் விடும், எளிதில் ஆட்சியைக் கைப்பற்றி விடலாம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால், அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது.

சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் சொல்லும்படியான ஆதரவு திமுகவிற்கு இருக்கின்றது. ஆனால், கொங்கு மாவட்டங்கள் அதிமுகவின் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. எனவே, கொங்கு மண்டல தொகுதிகளை குறி வைத்து, அதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சியின் தலைமை அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி, தேர்தல் களப்பணியாற்றி வரும் திமுகவினர், தற்போது, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் மீது வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்தத் தொடங்கியுள்ளனர்.

minister home rumor1 - updatenews360

அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் கேரளாவில் ரூ.200 கோடி மதிப்பில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான பிரம்மாண்ட வீடு ஒன்று உள்ளதாக ஒரு வீடியோ பரப்பப்பட்டு வருகிறது. உயர்தர வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடம்பர நாற்காலிகள் மற்றும் நீச்சல் குளங்கள் என பல்வேறு உயர் வசதிகளைக் கொண்டுள்ளது அந்த வீடு.

இது அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமானது என்று திமுகவினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். ஆனால், உண்மையில் அந்த பிரம்மாண்ட வீடு கேரள சூப்பர் ஸ்டாரான மம்முட்டிக்கு சொந்தமானது எனத் தெரிய வந்துள்ளது.

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பாலியல் பலாத்காரம், கொள்ளை, பிரியாணிக்கு அடிதடி, ஓசி பஜ்ஜிக்கு தகராறு என அடுத்தடுத்து பிரச்சனைகளில் சிக்கி திமுகவிற்கு அக்கட்சியின் நிர்வாகிகள் அவப்பெயரை ஏற்படுத்தி வருகின்றனர். இப்படியிருக்க, அதிமுகவின் இமேஜை டேமேஜ் செய்து, அதனை சமன் செய்து விட்டால், தங்களின் குறைகளை அவர்கள் சுட்டிக் காட்ட மாட்டார்கள் என நினைத்து இதுபோன்ற பொய்யான வீடியோக்களை சமூகவலைதளங்களில் திமுகவினர் பரப்பி வருவதாக அதிமுகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.

Admk Executive- Updatenews360

ஏற்கனவே, கோவையில் உள்ள 10 தொகுதிகளில் 1 மட்டுமே திமுக வசம் உள்ளது. எனவே, கோவையைச் சேர்ந்த அமைச்சரின் மீது பொய்க்குற்றச்சாட்டு வைத்து, சாதகமான சூழலை ஏற்படுத்தலாம் என்று நினைத்த திமுகவினருக்கு, சமூக வலைதளங்களின் மூலம் அதிமுகவினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். மேலும், தேர்தலை நேருக்கு நேர் எதிர்கொள்ள தெம்பில்லாதவர்களே இதுபோன்ற வக்கிரமான செயல்களில் ஈடுபடுவார்கள் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Views: - 46

0

0